உள்ளூர் செய்திகள்

முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் தொடக்கம்

Published On 2023-02-04 09:38 GMT   |   Update On 2023-02-04 09:38 GMT
  • தமிழக முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளை யாட்டுப் போட்டிகள் தொடக்க விழா நடைபெற்றது.
  • பள்ளி மாணவியருக்கான 100 மீ, 200 மீ, 400 மீ ஓட்டப்பந்தயம், நீளம், உயரம் தாண்டுதல் உள்ளிட்ட போட்டிகளில், மாவட்டம் முழுவதும் இருந்து, அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 400-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.

நாமக்கல்:

நாமக்கல் மாவட்ட விளையாட்டு மைதானத்தில், தமிழக முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளை யாட்டுப் போட்டிகள் தொடக்க விழா நடைபெற்றது. மாவட்ட விளையாட்டு அலுவலர் கோகிலா தலைமை வகித்து தொடங்கி வைத்தார். உடற்கல்வி ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.

பள்ளி மாணவியருக்கான 100 மீ, 200 மீ, 400 மீ ஓட்டப்பந்தயம், நீளம், உயரம் தாண்டுதல் உள்ளிட்ட போட்டிகளில், மாவட்டம் முழுவதும் இருந்து, அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 400-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர். இறகுப் பந்து போட்டியில் 120 பேரும், வாலிபால் போட்டியில் 9 அணிகளைச் சேர்ந்த 108 பேரும் என மொத்தம் 628 மாணவியர் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டனர்.

போட்டியில், முதல் 3 இடங்களை பெறுபவர்களுக்கு முறையே, ரூ.3,000, ரூ.2,000, ரூ.1,000 பரிசுத்தொகையும், சான்றிதழும் வழங்கப்படும். இன்று முதல் 10-ந் தேதி வரை, பள்ளி மாணவ, மாணவியருக்கு வாலிபால், கால்பந்து, சிலம்பம், மேசைப்பந்து, கபடி, கூடைப்பந்து, நீச்சல், மட்டைப்பந்து , ஹாக்கி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற உள்ளன.

அதேபோல், வருகிற 6-ந் தேதி தொடங்கி 14-ந் தேதி வரை, கல்லூரி மாணவ, மாணவியருக்கு, நீச்சல், இறகுப் பந்து, தடகளம், கையுந்து பந்து, கபடி, கூடைப்பந்து, கால்பந்து, மேசைப்பந்து, மட்டைப்பந்து, சிலம்பம், ஹாக்கி உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளது.

மேலும், வருகிற 13 மற்றும் 15-ந் தேதிகளில் அரசு ஊழியர்களுக்கு, கபடி, தடகளம், வாலிபால், இறகு பந்து போட்டிகளும், வரும் 14-ந் தேதி, பொது பிரிவினருக்கு, கபடி, தடகளம், சிலம்பம், வாலி பால், இறகு பந்து, மட்டைபந்து ஆகிய போட்டிகளும், வரும் 15-ந் தேதி, மாற்றுத்திறனாளிகளுக்கு, கபடி, தடகளம், சிறப்பு கையுந்துபந்து, இறகுப்பந்து, எறிபந்து போட்டிகளும் நடைபெற உள்ளது.

அனைத்து போட்டி களிலும், வெற்றி பெறுப

வர்களுக்கு, மொத்தம் ரூ.41.58 லட்சம் மதிப்பி லான பரிசுத்தொகை வழங்கப்ப டும் என கலெக்டர் தெரி வித்துள்ளார்.

Tags:    

Similar News