உள்ளூர் செய்திகள்

திருக்குறள் முற்றோதல் போட்டிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

Published On 2022-11-30 09:18 GMT   |   Update On 2022-11-30 09:18 GMT
  • தமிழக அரசால் “திருக்குறள் முற்றோதல் பாராட்டுப் பரிசுத்” திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
  • 1330 குறட்பாக்களையும் ஒப்பிக்கும் மாணவ -மாணவியர்களுக்குத் தலா ரூ.10,000 ரொக்கப் பரிசாகத் தமிழ் வளர்ச்சித்துறையால் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றது.

நாமக்கல்:

நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா பி. சிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்தி ருப்பதாவது:-

திருக்குறளில் உள்ள கருத்துக்களைப் பள்ளி மாணவர்கள் இளம் வயதிலேயே அறிந்து கொண்டு, கல்வியறிவோடு நல்லொழுக்கம் மிக்கவர்களாக விளங்கும் வகையில் தமிழக அரசால் "திருக்குறள் முற்றோதல் பாராட்டுப் பரிசுத்" திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. 1330 குறட்பாக்க–ளையும் ஒப்பிக்கும் மாணவ -மாணவியர்களுக்குத் தலா ரூ.10,000 ரொக்கப் பரிசாகத் தமிழ் வளர்ச்சித்துறையால் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றது.

2022-23 ஆண்டில் இத்திட்டத்தின்கீழ் போட்டியில் பங்கேற்கும் மாணவர்கள் 1330 குறட்பாக்களையும் ஒப்பிக்கும் திறன்கொண்ட மாணவர்களாக இருக்க வேண்டும். ஏற்கனவே இந்த போட்டியில் பரிசு பெற்றவர்கள் மீண்டும் இந்தப் போட்டியில் கலந்து கொள்ள இயலாது.

போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் மாணவர்கள் நாமக்கல் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் விண்ணப்பம் பெறலாம் அல்லது தமிழ் வளர்ச்சித்துறையின் வலைதளத்தில் (https://tamilvalarchithurai.tn.gov.in//) இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பத்தை நிறைவு செய்து 26.12.2022-க்குள் நாமக்கல் மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் நேரில் அளிக்கலாம். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News