உள்ளூர் செய்திகள்

மன்னார்குடியில் புதிய பஸ் நிலையம் கட்டுவதற்கு டி.ஆர்.பி.ராஜா எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டினார்.

மன்னார்குடியில், புதிய பஸ் நிலைய கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டு விழா

Published On 2023-03-14 09:10 GMT   |   Update On 2023-03-14 09:10 GMT
  • கட்டுமான பணிகள் முதற்கட்டமாக ரூ. 26 கோடியே 76 லட்சம் மதிப்பில் தொடங்கப்பட்டுள்ளது.
  • பாதாள சாக்கடை பணிகளும், பைபாஸ் சாலை பணிகளும் விரைவில் தொடங்கப்படும்.

மன்னார்குடி:

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில்உள்ள காமராஜர் பஸ்நிலையம் பழுதடைந்து காணப்பட்ட தால் புதிய கட்டிடம் கட்டும் பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

இதில் டி.ஆர்.பி.ராஜா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி வைத்து பணிகளை தொடங்கி வைத்தார்.

பின்னர் நிருபர்களிடம் கூறுகையில்:-

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நவீன வசதிகளுடன் கூடிய ஒருங்கிணைந்த பஸ் நிலையம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.

இதற்கான கட்டுமான பணிகள் முதற்கட்டமாக ரூ. 26 கோடியே 76 லட்சம் மதிப்பில் இன்று தொடங்கப்பட்டுள்ளது.

இந்த பணிகள் 18 மாதங்களுக்குள் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.

இதேபோல், மன்னார்குடியில் பாதாள சாக்கடை பணிகளும், பைபாஸ் சாலை பணிகளும் விரைவில் தொடங்கப்படும் என்றார்.

விழாவில் நகர்மன்ற தலைவர் மண்ணை சோழராஜன், தி.மு.க. நகர செயலாளர் வீரா கணேசன், நகராட்சி ஆணையர் சென்னுகிருஷ்ணன் ஆகி யோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News