கோண்டூர் ஊராட்சியில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா: அய்யப்பன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
- 1 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து திட்ட பணிகள் பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
- வட்டார வளர்ச்சி அலுவலர் சுதா, துணை வட்டார வளர்ச்சி அலு வலர் செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கடலூர்:
கடலூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட கோண்டூர் ஊராட்சியில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சமுதாயக்கூடம்,ரேஷன் கடை, சிமெண்ட் சாலை, தார் சாலை, வடிகால் வசதி உள்ளிட்ட பணிகளுக்கு 1 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து திட்ட பணிகள் பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
விழாவிற்கு அய்யப்பன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி திட்ட பணிகளை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் சுதா, துணை வட்டார வளர்ச்சி அலு வலர் செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் பாலாஜி வரவேற்றார். இதில் கூட்டுறவு சங்க தலைவர் ஆதி பெருமாள், அரசு ஒப்பந்ததாரர் ராஜ சேகர், ஒன்றிய கவுன்சிலர் சுபாஷினி சீனிவாசன், ஊராட்சி செயலாளர் வேலவன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சுதாகர், வேணு உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சாந்தி பழனிவேல் நன்றி கூறினார்.