உள்ளூர் செய்திகள்

கூட்டுறவு வங்கி வாசலில் ராஜேந்திரன் தர்ணாவில் ஈடுபட்ட காட்சி.

போலி நகைகளை அடகு வைத்து மோசடி?- கூட்டுறவு வங்கி நிர்வாகி 'திடீர்' தர்ணா போராட்டம்

Published On 2023-01-31 09:18 GMT   |   Update On 2023-01-31 09:18 GMT
  • கூட்டுறவு நகர வங்கியில் போலி நகைகள் மூலம் ரூ.15 லட்சம் வரை கடன் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
  • நகைகள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கோவில்பட்டி:

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி புது ரோட்டில் கூட்டுறவு நகர வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் போலி நகைகளை அடகு வைத்து ரூ.15 லட்சம் வரை கடன் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதையடுத்து கடந்த ஆண்டு அக்டோபர் 3-ந் தேதி கூட்டுறவு சங்கத்தில் அடகு வைக்கப்பட்ட நகைகள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என்று கூட்டுறவு சங்க தலைவர் ரமேஷ் தலைமையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஆனால் 3 மாதங்களுக்கு மேலாகியும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.

இந்நிலையில் கூட்டுறவு நகர வங்கி ஊழியர்கள் சிலர் போலி நகைக்கான பணத்தை செலுத்தி திருப்பியுள்ளதாக கூறப்படுகிறது.

போலி நகைகள் வைத்து உள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் அவர்களை காப்பாற்ற நினைக்கும் மேலாண்மை இயக்குநர் அகிலா மற்றும் அதிகரிகளை கண்டித்து வங்கியின் நிர்வாக இயக்குனராக உள்ள ராஜேந்திரன் என்பவர் திடீரென தர்ணாவில் ஈடுபட்டார்.

Tags:    

Similar News