உள்ளூர் செய்திகள்

சிங்காநல்லூரில் மூதாட்டியிடம் ரூ.50 ஆயிரம் மோசடி

Published On 2023-07-18 08:41 GMT   |   Update On 2023-07-18 08:41 GMT
  • ஜெயலட்சுமிக்கு பணம் எடுக்க தெரியாததால் அங்கிருந்த நபரை உதவிக்கு அழைத்தார்.
  • மர்மநபர் வேறொரு ஏ.டி.எம். கார்டை ஜெயலட்சுமியிடம் கொடுத்து விட்டு சென்றார்.

கோவை,

கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள எஸ்ஐஎச்எஸ் காலனி பெத்தேல் நகர் 3-வது தெருவை சேர்ந்தவர் பழனி முருகன். இவரது மனைவி ஜெயலட்சுமி(60).

இவர் கடந்த 15-ந் தேதி பணம் எடுப்பதற்காக சிங்காநல்லூர் திருச்சி ரோட்டில் உள்ள ஒரு ஏ.டி.எம். மையத்துக்கு சென்றார். அப்போது அவருக்கு பணம் எடுக்க தெரியாததால் அங்கிருந்த ஒரு நபரை உதவிக்கு அழைத்தார்.

அந்த நபர் அவரிடம் ஏ.டி.எம். கார்டை வாங்கி ரகசிய எண்ணை கேட்டு தெரிந்து கொண்டார். பின்னர் ஏ.டி.எம். கார்டு வேலை செய்யவில்லை என கூறி மூதாட்டியிடம் கொடுத்துவிட்டு வேகமாக சென்று விட்டார்.

இதனையடுத்து ஜெயலட்சுமியும் அங்கிருந்து சென்று விட்டார். பின்னர் சிறிது நேரம் கழித்து அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.50 ஆயிரம் எடுக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்தது. அந்த மர்மநபர் வேறொரு ஏ.டி.எம். கார்டை ஜெயலட்சுமியிடம் கொடுத்து விட்டு அவரது ஏ.டி.எம். கார்டு மூலம் பணம் எடுத்து மோசடியில் ஈடுபட்டுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த ஜெயலட்சுமி இதுகுறித்து சிங்காநல்லூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து மோசடி நபரை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News