உள்ளூர் செய்திகள்

மாணவி ஒருவருக்கு ஊராட்சி ஓன்றியக்குழு தலைவர் பாலசிங் விலையில்லா சைக்கிள் வழங்கிய காட்சி.

உடன்குடி தேரியூர் பள்ளியில் 66 மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்

Published On 2022-09-18 06:55 GMT   |   Update On 2022-09-18 06:55 GMT
  • ஸ்ரீ ராமகிருஷ்ண சிதம்பரேஸ்வரர் மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா நடைபெற்றது.
  • ஊராட்சி ஓன்றியக்குழு தலைவர் பாலசிங் தலைமை தாங்கி 66 மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்.

உடன்குடி:

உடன்குடி தேரியூர் ஸ்ரீ ராமகிருஷ்ண சிதம்பரேஸ்வரர் மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா நடைபெற்றது.

உடன்குடி ஊராட்சி ஓன்றியக்குழு தலைவர் பாலசிங் தலைமை தாங்கி 66 மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார். தமிழக அரசு மாணவர்களுக்கு செயல்படுத்தி வரும் திட்டங்கள், மாணவர்கள் ஓழுக்கத்துடன் கல்வி கற்பது குறித்து எடுத்துரைத்தார். உடன்குடி பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் மால்ராஜேஷ், பள்ளி முன்னாள் மாணவர் சங்க தலைவர் ஜீவானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளித் தலைமையாசிரியர் விங்கேஸ்வரன் வரவேற்றார். தி.மு.க. மாவட்ட சார்பு அணி துணை அமைப்பாளர் ஷேக் முகமது, நிர்வாகி மோகன், ஓன்றிய இளைஞரணி அமைப்பாளர் பயஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஆசிரியை ராஜதிலகவதி நன்றி கூறினார்.

Tags:    

Similar News