அரசு பள்ளி மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்- எம்.எல்.ஏ. வழங்கினார்
- மாவட்ட அளவில் முதலிடத்தை பிடிக்கும் மாணவ -மாணவிகளுக்கு ஒன்றரை பவுன் தங்க செயின் வழங்கப்படும்.
- 10-ம் வகுப்பில் முதல் மூன்று இடங்களை பிடித்த அமிர்தவல்லி, வர்ஷினி, பரமேஸ்வரி ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட்டது.
திருவாரூர்:
திருவாரூர் அருகே அம்மையப்பன் அரசு மேல்நிலைப் பள்ளியில் அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு முதன்மைக் கல்வி அலுவலர் தியாகராஜன் தலைமை வைத்தார். தலைமை ஆசிரியர் அருளாளன் வரவேற்று பேசினார். மாணவ -மாணவிகளுக்கு, கலைவாணன் எம்.எல்.ஏ., சைக்கிள்களை வழங்கி பேசும்போது:-
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 10-ம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் மாவட்ட அளவில் முதலிடத்தை பிடிக்கும் மாணவ -மாணவிகளுக்கு ஒன்றரை பவுன் தங்கச் செயின் வழங்கப்படும் என்றார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி துணை தலைவர் சேகர், ஒன்றிய குழு துணைத் தலைவர் பாலச்சந்திரன், ஊராட்சி மன்றத் தலைவர் முருகதாஸ் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்களும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
முன்னதாக ஆசிரியர்கள் அனைவருக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் கடந்த ஆண்டு பொது தேர்வில் 12 ஆம் வகுப்பில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற அபிநேசா, மாலஸ்ரீ, அட்சயா ஆகியோருக்கும் 10-ம் வகுப்பில் முதல் மூன்று இடங்களை பிடித்த அமிர்தவல்லி, வர்ஷினி, பரமேஸ்வரி ஆகியோருக்கும் விருதுகள் வழங்கப்பட்டது. முடிவில் உதவி தலைமை ஆசிரியர் ஜான்அருள் நன்றி கூறினார்.