உள்ளூர் செய்திகள்

பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ-மாணவிகளுக்கு அமைச்சர் அர.சக்கரபாணி பரிசுகள் வழங்கினார்.

ஒட்டன்சத்திரத்தில் 120 மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள்

Published On 2023-08-26 05:46 GMT   |   Update On 2023-08-26 05:46 GMT
  • ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதியில் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் அமைச்சர் அர.சக்கரபாணி கலந்துகொண்டு 120 மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள் மற்றும் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.
  • பின்னர், கள்ளிமந்தையம் திருப்பதி அருள்நெறி மேல்நிலைப்பள்ளியில் குறுவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார்.

ஒட்டன்சத்திரம்:

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதியில் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் அமைச்சர் அர.சக்கரபாணி கலந்துகொண்டு ரூ.33 லட்சம் மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து, ரூ.14.15 கோடி மதிப்பீட்டில் பள்ளிகளில் புதிய கட்டிட பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 120 மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள் மற்றும் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.

பழனி ஊராட்சி ஒன்றியம், மேலக்கோட்டை ஊராட்சி, பெருமாள்நாயக்கன்வலசு கிராமத்தில் ரூ.10லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய சமுதாயக்கூடம், எரமநாயக்கன்பட்டியில் ரூ.23.57 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஊராட்சி மன்ற அலுவலகம் ஆகியவை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். திண்டுக்கல் மத்திய கூட்டுறவு வங்கி சார்பில் கால்நடை பராமரிப்பு நடைமுறை மூலதனக்கடனாக 63 பயனாளிகளுக்கு தலா ரூ.56,000 கடனுதவி வழங்கினார்.

தொடர்ந்து ஒட்டன்சத்திரம் கே.ஆர்.அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் நபார்டு திட்டத்தில் ரூ.2.6 கோடி மதிப்பீட்டில் 12 வகுப்பறைகள் கொண்ட கட்டிடம், தனியார் பங்களிப்புடன் ரூ.6.00 கோடி மதிப்பீட்டில் 36 வகுப்பறைகள் கொண்ட கட்டிடம் என ரூ.8.60 கோடி மதிப்பீட்டில் 48 வகுப்பறைகள் கொண்ட கட்டிடங்கள் கட்டுவதற்கும், ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பரப்பலாறு அரசு மேல்நிலைப்பள்ளியில் நபார்டு திட்டத்தில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் 14 வகுப்பறைகள் கொண்ட கட்டிடம், மேல்கரைப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் ரூ.1.45 கோடி மதிப்பீட்டில் 5 வகுப்பறை கட்டிடம் மற்றும் ஆய்வுக்கூடம் கட்டுவதற்கும், கொக்கரக்கண்வலசு அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ.1.10 கோடி மதிப்பீட்டில் 5 வகுப்பறை கட்டிடம் கட்டுவதற்கும் என மொத்தம் ரூ.14.15 கோடி மதிப்பீட்டில் பள்ளி வகுப்பறை கட்டுமான பணிகளை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

அம்பிளிகை ஜேக்கப் நினைவு கிறித்துவ கல்லூரியில் நடைபெற்ற விழாவில் பெரியகோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி, அம்பிளிக்கை சாந்தி நிகேதன் மேல்நிலைப்பள்ளி, ஓடைப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளிகளைச் சேர்ந்த 120 மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள் மற்றும் குறு வட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார். பின்னர், கள்ளிமந்தையம் திருப்பதி அருள்நெறி மேல்நிலைப்பள்ளியில் குறுவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார்.

இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர்திலகவதி, ஒட்டன்சத்திரம் நகர் மன்ற தலைவர் திருமலைசாமி, நகர்மன்ற துணைத் தலைவர்வெள்ளைச்சாமி, நகராட்சி ஆணையாளர் மீனா, பழனி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர்ஈஸ்வரி கருப்புச்சாமி, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்சங்கீதா பழனிச்சாமி, பழனி வருவாய் கோட்டாட்சியர்சரவணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள்ரவீந்திரன், தாஹிரா, மாவட்ட கல்வி அலுவலர்(பழனி) பரிமளா, ஒட்டன்சத்திரம் வட்டாட்சியர்முத்துசாமி, ஆசிரியர்கள், மாணவ- மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News