உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

தேனியில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு

Published On 2023-09-29 05:03 GMT   |   Update On 2023-09-29 05:03 GMT
  • ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 1 மற்றும் தாள் 2 தேர்வுகளுக்கான ஒருங்கிணைந்த இலவசப் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளது.
  • மேலும் விபரங்களுக்கு தேனி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலரை தொடர்பு கொள்ளுமாறு கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

தேனி:

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் 2023-ஆம் ஆண்டிற்கான ஆசிரியர் தகுதித் தேர்வுத்தாள் 1 மற்றும் தாள் 2 தேர்வுகளுக்கான அறிவிப்பு இந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 1 மற்றும் தாள் 2 தேர்வுகளுக்கான ஒருங்கிணைந்த இலவசப் பயிற்சி வகுப்புகள் தேனி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் சிறந்த வல்லுனர்களைக் கொண்டு நேரடி பயிற்சி வகுப்புகள் நாளை (30-ந் தேதி) முதல் தொடங்கப்பட உள்ளது.

இப்பயிற்சி வகுப்புகள் வாரத்தில் சனி மற்றும் ஞாயிறு ஆகிய கிழமைகளில் நடைபெறும். இப்பயிற்சியின் போது ஒவ்வொரு பாடத்திற்கும் மாதிரி தேர்வுகள், வினாடி வினா மற்றும் குழு விவாதங்களும் நடத்தப்படும்.

ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 1 மற்றும் தாள் 2 ஆகிய தேர்வுகளுக்கு தயாராகி கொண்டிருக்கும் போட்டித் தேர்வர்கள் நேரடி பயிற்சி வகுப்புகளில் சேர்ந்து பயன்பெறலாம். இது தொடர்பான விபரங்களுக்கு தேனி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலரை தொடர்பு கொள்ளுமாறு கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News