மத்தூர் அரசு பள்ளியில் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி
- கிருஷ்ணகிரி தி.மு.க. கிழக்கு மாவட்ட செயலாளரும், பர்கூர் சட்டமன்ற உறுப்பினருமான மதியழகன் 282 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கினார்.
- இந்நிகழ்ச்சிக்கு பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் கணேசகுமார் தலைமை வகித்தார்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் கணேசகுமார் தலைமை வகித்தார். மத்தூர் ஆண்கள் மேல்நிலைப் தலைமையாசிரியர் வாசுதேவன் அனைவரையும் வரவேற்று பேசினார்.
தி.மு.க. வடக்கு ஒன்றிய கழக செயலாளர் குண வசந்தரசு, மாவட்ட குழுத் தலைவர் மணிமேகலை நாகராஜ், மாவட்ட பொரு–ளாளர் கதிரவன், தலைமை செயற்குழு உறுப்பினர் செந்தில், மத்தூர் ஒன்றியக் குழுத் தலைவர் விஜியலட்சுமி பெருமாள், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் சத்தியமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட கிருஷ்ணகிரி தி.மு.க. கிழக்கு மாவட்ட செயலாளரும், பர்கூர் சட்டமன்ற உறுப்பினருமான மதியழகன் 282 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கினார்.
இதற்கான ஏற்பாடுகளை பள்ளியின் உதவியாசிரியர்கள் சின்னதுரை, சின்ராஜ், முருகன், ரவி, சக்திவேல், கோவிந்தராஜ் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
இந்நிகழ்ச்சியில் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் நிறைவாக மத்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் பட்டதாரி ஆசிரியர் மணிமேகலை நன்றி கூறினார்.