நிலக்கோட்டையில் ஆதரவற்ற பெண்களுக்கு 5 வெள்ளாடுகள்
- தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத்துறை சார்பாக ஆதரவற்ற பெண்களுக்கு சிறப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது
- விதவை, கணவனால் கைவிடப்பட்ட பெண், ஆதரவற்ற பெண்களுக்கு இத்திட்டத்தின் மூலம் உதவிகள் வழங்கப்படுகிறது
நிலக்கோட்டை :
தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத்துறை சார்பாக இலவசமாக நிலக்கோட்டை ஒன்றியத்தில் ஏழ்மை நிலையில் உள்ள விதவை, கணவனால் கைவிடப்பட்ட பெண்,
ஆதரவற்ற பெண்களை தொழில் முனைவோர் நிலைக்கு உருவாக்குதல் என்ற சிறப்பு திட்டத்தின் கீழ் நூறு சதவீதம் மானியத்துடன் தலா 5 வெள்ளாடுகள் வீதம் 100 பெண்களுக்கு ரூ. 17 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் 500 ஆடுகள் வழங்கும் விழா நிலக்கோட்டை கால்நடை டாக்டர். செந்தில் குமார் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் நிலக்கோட்டை தி.மு.க தெற்கு ஒன்றிய செயலாளர் மணிகண்டன் கலந்துகொண்டு பெண்களுக்கு வெள்ளாடுகளை வழங்கினார். நிகழ்ச்சியில் வடக்கு ஒன்றிய செயலாளர் சவுந்தர பாண்டி, தெற்கு ஒன்றிய துணைச் செயலாளர் வெள்ளிமலை, முசுவனூத்து ஊராட்சி மன்ற தலைவர் ஜெயப்பிரகாஷ், ஒன்றிய கவுன்சிலர்கள் தியாகு, ராஜதுரை, நாகராஜன் மற்றும் கால்நடைத்துறை அதிகாரிகள், டாக்டர்கள், சுகாதார ஆய்வாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.