இந்துசமய அறநிலையத்துறை சார்பில் மருதமலை முருகன் கோவிலில் 23 ஜோடிகளுக்கு இலவச திருமணம்
- நிகழ்ச்சிக்கு தி.மு.க. கோவை வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமை தாங்கினார்.
- 30 வகையான சீர்வரிசைகளும் வழங்கப்பட்டது.
வடவள்ளி,
தமிழகம் முழுவதும் இன்று இந்து சமய அறநிலையத்துறை சார்பில் இலவச திருமணங்கள் நடைபெற்றது.
அதன் ஒரு பகுதியாக கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 23 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு தி.மு.க. கோவை வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமை தாங்கினார். இதில் கோவை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 23 திருமண ஜோடிகள் பங்கேற்றனர். அவர்களுடன் அவர்களது உறவினர்களும் வந்திருந்தனர்.
விழாவில், மணமகன்கள் மணப்பெண்களுக்கு தாலிகட்டி, குங்குமம் வைத்து விட்டனர். தொடர்ந்து அம்மி மிதித்து, மெட்டி அணிவித்தனர்.
திருமணத்தையொட்டி மணமக்களுக்கு 1/2 பவுன் தங்கத்தில் தாலி, மற்றும் கட்டில் மெத்தை, பாத்திரங்கள் உள்பட 30 வகையான சீர்வரிசைகளும் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ரமேஷ் செய்திருந்தார்.
இன்று நடந்த திருமணவிழாவில், வால்பாறை, பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த 5 ஜோடிகளும், நீலகிரி மாவட்டத்தில் இருந்து 3 ஜோடிகளும். கோவையில் 15 ஜோடிகள் என மொத்தம் 23 ஜோடிகளுக்கு திருமணம் நடந்தது.