உள்ளூர் செய்திகள்

இலவச வெறிநாய் தடுப்பூசி முகாமினை பாபநாசம் எம்.எல்.ஏ. ஜவாஹிருல்லா தொடங்கி வைத்தார்.

பாபநாசம் ராஜகிரி ஊராட்சியில் இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம்-ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

Published On 2023-01-08 10:31 GMT   |   Update On 2023-01-08 10:31 GMT
  • முகாமில் 50-க்கும் மேற்பட்ட நாய் மற்றும் பூனைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
  • வெறிநோய் பற்றிய விழிப்புணர்வு கலந்துரையாடல் பள்ளி மாணவர்களுடன் நடைபெற்றது.

பாபநாசம்:

பாபநாசம் ஒன்றியம் ராஜகிரி ஊராட்சியில் காஸ்மியா மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்பு துறை மற்றும் தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டம் சார்பில் வெறிநாய் தடுப்பு குறித்த விழிப்புணர்வு மற்றும் இலவச வெறி நோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

இம்முகாமிற்கு ராஜகிரி ஊராட்சி மன்ற தலைவர் சமீமா பர்வீன் முபாரக் உசேன் தலைமை வகித்தார். பாபநாசம் திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் நாசர், மாவட்ட கவுன்சிலர் பாத்திமா ஜான் ராயல் அலி, ஒன்றிய கவுன்சிலர் ரஜியா சுல்தானா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் சம்பந்தம் வரவேற்று பேசினார்.

முகாமில் பாபநாசம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா கலந்து கொண்டு முகாமினை துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். பாபநாசம் ஒன்றிய கால்நடை மருத்துவர்கள் மணிச்சந்திரன், ஏஞ்சலா சொர்ணமதி, சங்கமித்ரா, சௌந்தரராஜன், அபிமதி மற்றும் கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் மதியழகன், பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்துகொண்டு சிகிச்சை அளித்தனர்.

இம்முகாமில் 50-க்கும் மேற்பட்ட நாய் மற்றும் பூனைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. மேலும் வெறிநோய் பற்றிய விழிப்புணர்வு கலந்துரையாடல் பள்ளி மாணவர்களுடன் நடைபெற்றது.

முகாமில் மாவட்ட பிரதிநிதி தமிழ்வாணன், ஒன்றிய துணை செயலாளர் கலிய–மூர்த்தி, பெரிய பள்ளிவாசல் செயலாளர் யூசுப் அலி, முன்னாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் அசரப்அலி, ஒன்றிய இளைஞர் அணி அமைப்–பாளர் மணி–கண்டன், துணை அமைப்பாளர் மணி–மாறன், வட்டார வளர்ச்சி அலு–வலர்கள் சிவக்குமார், ஆனந்தராஜ், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜன், ஐயப்பன், ராஜகிரி காஸ்மியா ஜமாலியா சமூக மேம்பாட்டு இயக்க தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.

முடிவில் ராஜகிரி ஊராட்சி செயலாளர் ஜெய்குமார் நன்றி கூறினார்.

Tags:    

Similar News