உள்ளூர் செய்திகள்

முகாமில் சிறப்பாக கன்றுகளை வளர்த்த விவசாயிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்ட காட்சி.

இலவச கால்நடை மருத்துவ முகாம்

Published On 2022-11-11 10:04 GMT   |   Update On 2022-11-11 10:04 GMT
  • வாழப்பாடி அடுத்த மாரியம்மன் புதூரில், தமிழக அரசின் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் கால்நடை பராமரிப்பு விழிப்புணர்வு மற்றும் இலவச மருத்துவ முகாம் நடந்தது.
  • இந்த முகாமில் கன்றுகள் பேரணி நடத்தி, சிறப்பாக கன்றுகளை வளர்த்த விவசாயிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

வாழப்பாடி:

வாழப்பாடி அடுத்த மாரியம்மன் புதூரில், தமிழக அரசின் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் கால்நடை பராமரிப்பு விழிப்புணர்வு மற்றும் இலவச மருத்துவ முகாம் நடந்தது. முகாமிற்கு, ஒன்றியக்குழு உறுப்பினர் உழவன் முருகன் தலைமை வகித்தார். கால்நடை பராமரிப்புத்துறை வாழப்பாடி உதவி இயக்குநர் மருத்துவர் முருகன் வரவேற்றார்.

துக்கியாம்பாளையம் ஊராட்சி மன்றத் தலைவர் கோவிந்தராஜ் முகாமை தொடங்கி வைத்தார். மாரியம்மன்புதூர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த விவசாயிகளுக்கு, கறவைமாடுகள், எருது மற்றும் ஆடு, கோழிகள் உள்ளிட்ட கால்நடைகள் வளர்ப்பு மற்றும் பராமரிப்பு முறைகள் குறித்து, கால்நடை மருத்துவர்கள் செல்வராஜ், கோவிந்தன், கால்நடை பாராமரிப்பு உதவியாளர் மூர்த்தி, சுதாகர்

ஆகியோர் கொண்ட கால்நடை மருத்துவக்குழுவினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

500-க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு குடற்புழுநீக்கம், ஆண்மை நீக்கம், சினைப்பரிசோதனை, செயற்கை முறை கருவூட்டல், தடுப்பூசி செலுத்துதல் உள்ளிட்ட இலவச சிகிச்சை அளித்தனர். இந்த முகாமில் கன்றுகள் பேரணி நடத்தி, சிறப்பாக கன்றுகளை வளர்த்த விவசாயிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

முகாமில், கால்நடை வளர்க்கும் விவசாயிகள் பாபு, சுரேஷ், செந்தில், முருகன், பார்த்திபன், தமிழ், பாஸ்கர், வசந்தா, ரஞ்சிதா, ராஜாத்தி, அருணா சந்திரா உள்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News