மாற்றுத்திறனாளி வீரருக்கு உபகரணங்கள் வாங்க நிதியுதவி
- மாநில அளவிலான வீல்சேர் கிரிக்கெட் போட்டி 17-ந் முதல் 19-ந் தேதி வரை நடைபெறுகிறது.
- போட்டிக்கு தேவையான உபகரணங்கள் வாங்குவதற்கு நிதிஉதவி செய்யும்படி கோரிக்கை.
தஞ்சாவூர்:
தமிழ்நாடு வீல் சேர் கிரிக்கெட் சங்கத்தின் சார்பில் வேலூரில் மாநில அளவிலான வீல் சேர் கிரிக்கெட் போட்டி 17-ந் தேதி தொடங்கி 19-ந் தேதி வரை நடைபெறுகிறது.
இந்தப் போட்டியில் தஞ்சையைச் சேர்ந்த மாற்றுத்திறனாளியான வீல் சேர் கிரிக்கெட் வீரர் அருண்குமார் என்பவர் கலந்து கொண்டு விளையாடுகிறார்.
அவருக்கு போட்டிக்குத் தேவையான உபகரணங்கள் வாங்குவதற்கு நிதி உதவி செய்யும்படி அனைத்திந்திய சட்ட உரிமைகள் மற்றும் மக்கள் பாதுகாப்பு கவுன்சில் சார்பாக மாநிலத் தலைவர் சாலமன், மாவட்டத் தலைவர் மோகனசுந்தரம் ஆகியோர் தஞ்சை மாநகராட்சி மேயர் சண்.ராமநாதனிடம் கோரிக்கை வைத்தனர்.
அந்தக் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் மாற்றுத்திறனாளியான அருண்குமாருக்கு போட்டிக்குத் தேவையான உபகரணங்கள் வாங்க ரூ.15 ஆயிரம் உதவித்தொகையை மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் வழங்கினார்.
அப்போது மாவட்டத் தலைவர் மோகனசுந்தரம், மாவட்ட செயலாளர் விஷ்ணு தேவன் ஆகியோர் உடன் இருந்தனர்.