கடல் சீற்றம்; நாகை மீனவர்கள் 4-வது நாளாக கடலுக்கு செல்லவில்லை
- சுமார் 10 அடி உயரத்திற்கு அலைகள் காணப்படுகிறது.
- 3000 பைபர் படகுகள் 4-வது நாளாக இன்றும் கடலுக்கு செல்லவில்லை.
நாகப்பட்டினம்:
இலங்கை அருகே தென்மேற்கு வங்க கடல் பகுதியில நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக மாறியது.
இதனால் கடலோர மாவட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுக்கப்பட்டது மேலும் நேற்று நாகை துறைமுகத்தில்புயல் உருவாகக்கூடிய திடீர் காற்றுடன் கூடிய மழை உள்ள வானிலை பகுதி உருவாகியுள்ளது என்பதை குறிக்கும் வகையில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டிருந்தது.
இந்நிலையில் நாகை மாவட்டத்திலுள்ள நாகூர், அக்கரைப்பேட்டை, செருதூர், காமேஸ்வரம், கோடியக்கரை உள்ளிட்ட 25கடலோர மீனவ கிராமங்களிலும் கடல் வழக்கத்தை விட சீற்றத்துடன் காணப்படுகிறது.
சுமார் 10அடி உயரத்திற்கு அலைகள் காணப்படுகிறது ஏற்கனவே மீனவர்களுக்கு கடலுக்கு செல்லக்கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் நாகை மாவட்டத்தில் உள்ள 700 விசைபடகுகள் 3000 பைபர் படகுகள் 4வது நாளாக இன்றும் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.