உள்ளூர் செய்திகள்
- இக்கோயில் சித்திரை திருவிழா கடந்த சில தினங்களாக நடைபெற்று வருகிறது.
- திருவிழாவின் பத்தாவது நாளான நேற்று மாலை தூக்குத் தேர் திருவிழா நடைபெற்றது.
பட்டுக்கோட்டை:
பட்டுக்கோட்டை அருகே உள்ள சூரப்பள்ளம் கிராம த்தில், 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு சூரமாகாளியம்மன் திருக்கோவில் உள்ளது. இக்கோயில் சித்திரை திருவிழா கடந்த சில தினங்களாக நடைபெற்று வருகிறது.
திருவிழாவின் பத்தாவது நாளான நேற்று மாலை தூக்குத் தேர் திருவிழா நடைபெற்றது. இதில் அலங்கரிக்கப்பட்ட 40 அடி உயரமும் 20 அடி அகலமும் 6 டன் எடை கொண்ட சக்கரங்கள் இல்லாத தேரை நான்கு பிரிவுகளாக ஒவ்வொரு பிரிவிற்கும் சுமார் 40 பேர் கொண்ட பக்தர்கள் சீருடை அணிந்து தோளில் சுமந்தவாறு சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரமுள்ள அங்குள்ள குளக்கரையைச் சுற்றி மீண்டும் கோவிலை வந்தடைந்தனர்.
இப்பகுதியில் பிரபலமான தூக்குத் தேரோட்டம் காண, உள்ளூர் மற்றும் சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்க ணக்கானோர் வந்திருந்தனர்.