உள்ளூர் செய்திகள்

கோபிநாதம்பட்டி சாலையில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகளை படத்தில் காணலாம்.


விநாயகர் சிலை தயாரிப்பு பணிகள் தீவிரம்

Published On 2023-09-02 09:43 GMT   |   Update On 2023-09-02 09:43 GMT
  • ரூ. 7 ஆயிரம் முதல் ரூ.9 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
  • சிலை கேட்டு கடந்த 2 மாதங்களுக்கு முன்பிருந்தே ஆர்டர்கள் வந்து கொண்டுள்ளது.

அரூர்,

நாடு முழுவதும் வரும் செப்டம்பர் 18-ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி அரூர் பகுதியில் விநாயகர் சிலைகள் தயாரிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் புழுதியூர் புதன்சந்தை அருகில் சிலை தயாரிப்பு பணியில் ஈடுபட்டுள்ள குமரேசன் கூறுகையில், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்து விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்காக விநாயகர் சிலை கேட்டு கடந்த 2 மாதங்களுக்கு முன்பிருந்தே ஆர்டர்கள் வந்து கொண்டுள்ளது.

இங்கு அரை அடி முதல் 7 அடி வரை சிலைகள் தயாரிக்கப்படுகிறது. சிலைகளானது அளவை பொருத்து ரூ. 7 ஆயிரம் முதல் ரூ.9 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

களிமண்ணால் ஆன சிலைகளுக்கு வண்ணம் தீட்ட, நீர் நிலைகள் மாசுபடாத வண்ணம், ரசாயண கலவை இன்றி இயற்கை வண்ணங்கள் தீட்டப்பட்டுகிறது என அவர் கூறினார்.

Tags:    

Similar News