திட்டக்குடி அருகே மணல் கொள்ளை கும்பல் வீடு புகுந்து சரமாரியாக தாக்குதல்: ஆஸ்பத்திரியில் 3 பேர் அனுமதி
- போலீசாரிடம் கனிம வள கொள்ளை நடப்பதாக எழுத்துப்பூர்வமாக ஒரு வாரம் முன்பு புகார் அளித்தார்.
- சேகரின் வீடு புகுந்து வெளிப்புறத்தில் தெருவில் சரமாரியாக தாக்குதலில் ஈடுபட்டனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே ஏ . மருர் கிராமத்தில் தொடர்ச்சியாக கனிம வள கொள்ளை நடப்பதாகவும் டிராக்டரில் கிராவல் எடுத்துச் சொல்வதாகவும் காவல் நிலையத்தில் கிராம நிர்வாக அலுவலர் புகார் தெரிவித்தார். கிராம நிர்வாக அலுவலருக்கு கிராவல் கொள்ளை பற்றி ஏ. மருர் ஊராட்சி மன்ற துணைத் தலைவரின் கணவர் சேகர் தகவல் தெரிவித்ததாகவும் இதன் காரணமாக கிராவலை கொள்ளையடிக்கும் கும்பலுக்கும் ஊராட்சி மன்ற துணைத் தலைவரின் கணவர் சேகருக்கும் முன் விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் கிராம நிர்வாக அலுவலர் சிறுப்பாக்கம் காவல் நிலையத்திலும் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்திலும் போலீசாரிடம் கனிம வள கொள்ளை நடப்பதாக எழுத்துப்பூர்வமாக ஒரு வாரம் முன்பு புகார் அளித்தார்.
இந்த புகாரை பெற்றுக் கொண்டு நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வந்த நிலையில் கிராம நிர்வாக அலுவலர் புகார் கொடுக்க சேகர் தான் காரணம் எனக் கூறி இதில் ஆத்திரம் அடைந்த கனிம வள கொள்ளைகள் ஈடுபடும் கும்பல் சேகரின் வீடு புகுந்து வெளிப்புறத்தில் தெருவில் சரமாரியாக தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் சேகர் அவரது உறவினர்கள் 3 பேர் பலத்த காயமடைந்து கள்ளக்கு றிச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.