அரூர் பஸ் நிலையத்தில் 9½ கிலோ கஞ்சா கடத்தியவர் கைது
- கஞ்சாவை ஆந்திர மாநிலத்தில் இருந்து தேனி மாவட்டத்திற்கு ரெயில் மற்றும் பஸ்களில் மாறி மாறி பயணம் செய்து கடத்தி வந்தது தெரியவந்தது.
- போலீசார் மூர்த்தியை கைது செய்து அவரிடம் இருந்து ரூ.95 ஆயிரம் மதிப்புள்ள 9½ கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
தருமபுரி:
தருமபுரி மாவட்டம், அரூர் மதுவிலக்கு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் வசந்தா, சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் அரூர் பஸ் நிலையத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகம்படி ஒரு நபர் கையில் பையுடன் சுற்றி திரிந்து கொண்டிருந்தார். உடனே அவரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து விசாரித்தனர்.
அதில் தேனி மாவட்டம் தேவராம் சவுடம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த மூர்த்தி (வயது53) என்பவர் பையில் 9½ கிலோ கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. மேலும், அவர் இந்த கஞ்சாவை ஆந்திர மாநிலத்தில் இருந்து தேனி மாவட்டத்திற்கு ரெயில் மற்றும் பஸ்களில் மாறி மாறி பயணம் செய்து கடத்தி வந்தது தெரியவந்தது. உடனே போலீசார் மூர்த்தியை கைது செய்து அவரிடம் இருந்து ரூ.95 ஆயிரம் மதிப்புள்ள 9½ கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட மூர்த்தியை கோர்ட்டில் ஆஜர்படுத்தி தருமபுரி கிளை சிறையில் அடைத்தனர்.