காமராஜர் சிலைக்கு ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மரியாதை
- ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. சட்டமன்ற அலுவலகத்தில் காமராஜர் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
- மாணவ- மாணவிகளுக்கு ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. பதக்கங்களை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
நெல்லை:
பெருந்தலைவர் காமராஜரின் 121-வது பிறந்தநாளையொட்டி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொருளாளர் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. மகாராஜா நகர் சட்டமன்ற அலுவலகத்தில் பெருந்தலைவர் காமராஜர் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தார். அதன் பின் காங்கிரஸ் கொடி ஏற்றி அனைவருக்கும் இனிப்பு வழங்கினார்.
தொடர்ந்து நாங்குநேரி யூனியன், பருத்திபாடு ஊராட்சி, சுருளை கிராமத்தில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தார். அதன் பின் பொதுமக்கள் அனைவருக்கும் இனிப்பு வழங்கி கொண்டாடினார்.
அதன்பின்னர் மூலைக்கரைப்பட்டியில் காங்கிரஸ் கொடி ஏற்றி அங்கு நகர காங்கிரஸ் சார்பில் அமைக்கப்பட்டு இருந்த காமராஜர் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தார். அதன்பின் மக்கள் நீதி மையத்தின் சார்பில் மூலைக்கரைப்பட்டி ரீச் மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினராக ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு மாணவ- மாணவிகளுக்கு பதக்கங்களை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.அதன்பின் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
தொடர்ந்து களக்காட்டில் பெருந்தலைவர் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தார். அதன்பின் முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி சிலைக்கும் மலர் மாலை அணிவித்து, அனைவருக்கும் இனிப்பு வழங்கினார்.
அதனை தொடர்ந்து களக்காடு தம்பிதோப்பில் களக்காடு நகராட்சி காங்கிரஸ் துணை காமராஜர் தலைமையில் நடைபெற்ற பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு காமராஜர் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தார். அதன் பின் அனைவருக்கும் காலை உணவு வழங்கினார்.
தொடர்ந்து களக்காடு யூனியன், ராஜபுதூரில் ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்ற காமராஜர் பிறந்த நாள் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் நாங்குநேரி சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் மாவட்ட வட்டார, நகர, கிராம கமிட்டி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து பல்வேறு இடங்களில் நடைபெற்ற காமராஜர் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.