உள்ளூர் செய்திகள்
நாகை சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் கருடசேவை
- பங்குனி பெருவிழா கடந்த 28-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
- ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற 108 திவ்ய தேசங்களில் ஒன்றான சவுந்தரராஜ பெருமாள் திருக்கோவில் பங்குனி பெருவிழா கடந்த 28-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தினந்தோறும் பெருமாள் வீதி உலா நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
அதன்படி நேற்று 4-ம் நாள் விழாவான கருட சேவையை முன்னிட்டு சௌந்தரராஜ பெருமாள் வெள்ளி கருட வாகனத்தில் நான்கு மாட வீதிகளில் வீதி உலா காட்சி நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டு இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் வருகிற 5ஆம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.