உள்ளூர் செய்திகள்

ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் கருட சேவை நிகழ்ச்சி நடைபெற்ற போது எடுத்தபடம்.

ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் கருடசேவை நிகழ்ச்சி

Published On 2022-12-06 09:01 GMT   |   Update On 2022-12-06 09:01 GMT
  • சுவாமி பொலிந்து நின்ற பிரான் ஸ்ரீ தேவி பூதேவி நீளாதேவி ஆதி நாயகி குருகூர் நாயகி சமேதராக சீனக் குறட்டில் எழுந்தருளினார்.
  • அண்ணாவியார் பாலாஜி கைசிக ஏகாதசி புராணம் ஆன நம்பாடுவான் கதையை படித்தார்

தென்திருப்பேரை:

நவதருப்பதிகளில் ஒன்பதாம் திருப்பதி ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவில் ஆகும். இக்கோவிலில் நேற்று முன்தினம் இரவு 7.30 மணிக்கு கருடசேவை நடந்தது.

ஏகாதசியை முன்னிட்டு விஸ்வரூபம், திருமஞ்சனம், திருவாராதனம், பின்னர் சுவாமி பொலிந்து நின்ற பிரான் ஸ்ரீ தேவி பூதேவி நீளாதேவி ஆதி நாயகி குருகூர் நாயகி சமேதராக சீனக் குறட்டில் எழுந்தருளினார்.

இடது மண்டபத்தில் நம்மாழ்வார் தொடர்ந்து கூரத்தாழ்வார். ராமானுஜர். தேசிகர். மணவாளமாமுனி மற்றும் ஆழ்வாராதிகள். எழுந்தருளினர். மதுரகவி பரம்பரையின் அண்ணாவியார் பாலாஜி சுவாமியை அரிவாணம் கொண்டு அழைத்து வந்தனர்.

சுவாமி முன்னிலையில் அண்ணாவியார் பாலாஜி கைசிக ஏகாதசி புராணம் ஆன நம்பாடுவான் கதையை படித்தார். பின்னர் தீர்த்தம் சடாரி பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.

நம்மாழ்வார் தனது சன்னதி வந்தவுடன் அண்ணாவியார் சுவாமியை அவரது திரு மாளிகைக்கு பிரம்ம ரதத்தில் கொண்டு விடுவர அருளிப்பாடு சாதிப்பார். உடன் கோவில் ஸ்ரீ பாதம் தாங்கிகள் அவரை அவரது திரு மாளிகையில் கொண்டு விட்டனர். இரவு 7.30 மணிக்கு பொலிந்துநின்ற பிரான் கருட வாகனத்திலும் நம்மாழ்வார் அன்ன வாகனத்திலும் மாட வீதி புறப்பாடு நடந்தது.

இந்நிகழ்ச்சியில் நிர்வாக அதிகாரி அஜித், தக்கார் கோவல மணிகண்டன், ஆய்வாளர் லோகநாயகி, முன்னாள் அறங்காவலர் தலைவர் ராஜப்பா வெங்கடாச்சாரி உட்பட பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News