- 41 பயனாளிகளுக்கு அதற்குரிய மருந்து மாத்திரைகள் பரிந்துரைத்து மருத்துவ அறிவுரைகள்.
- காப்பகத்தில் உள்ள வேற்று மொழி பயனாளிகளிடம் டாக்டர்கள் அவரவரது மொழியில் பேசி கேட்டறிந்தார்கள்.
திருத்துறைப்பூண்டி:
மாற்றுத்திறனாளிகள் நாளை முன்னிட்டு நம்பிக்கை மனநல காப்பகத்தில் பில்லியன் ஆர்ட்ஸ் பீட்டிங் பவுண்டேஷன் இணைந்து பொது மருத்துவ முகாம் நம்பிக்கை மனநல காப்பகத்தில் நடைபெற்றது
திருத்துறைப்பூண்டி நகர் மன்ற உறுப்பினரும், காங்கிரஸ் தலைவருமான எழிலரசன் தலைமை வகித்தார். நம்பிக்கை மனநல காப்பக இயக்குனர் சௌந்தர்ராஜன், அப்போலோ மருத்துவமனை குழுமம் சார்பில் மூத்த அலுவலர் ஆனந்தபாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
காப்பக திட்ட மேலாளர் விஜயா அனைவரையும் வரவேற்று பேசினார் .மூத்த டாக்டர் வர்கீஸ், உதவி பேராசிரியர் டாக்டர் சருண், தசை இயக்க டாக்டர் கருணாநிதி மற்றும் செவிலியர்கள் உடல் எடை, உயரம், இரத்த அழுத்தம், சுகர் நிலை, உடல் இயக்கங்கள், கை நடுக்கம், ரத்த சோகை, தலைவலி, போன்ற பல்வகை வியாதிகளுக்கு உண்டான பரிசோதனைகள் செய்து நம்பிக்கை மனநல காப்பகத்தில் உள்ள 41 பயனாளிகளுக்கு அதற்குரிய மருந்து மாத்திரைகள் பரிந்துரைத்து மருத்துவ அறிவுரைகள் ஆலோசனைகள் வழங்கினார்கள் .
காப்பகத்தில் உள்ள வேற்று மொழி பயனாளிகளிடம் டாக்டர்கள் அவரவரது மொழியில் பேசி கேட்டறிந்தார்கள். மனநலம் பாதிக்கப்பட்டுள்ள அனைவரும் டாக்டர்களிடம் நன்றாக சாப்பிடுகின்றோம் சந்தோஷமாக இருக்கிறோம். என்று சொன்னதை கேட்டு டாக்டர்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள். மேலும் இவர்களை சந்தோஷமாக மகிழ்விக்க பணியாளர்கள் அனைவருக்கும் உதவி பேராசிரியர் டாக்டர் சருண் ஆலோசனைகளும் அறிவுரைகளும் வழங்கினார்.
காப்பக பணியாளர்கள் சரவணன், கோகிலா, சக்தி பிரியா, வள்ளி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இறுதியில் அப்போலோ மருத்துவமனை சார்பில் ஆனந்த் பாபு நன்றி கூறினார்.