- தற்போது ஒரு கிலோ இஞ்சி ரூ.110 முதல் அதிகபட்சமாக ரூ.225 வரை விற்கப்பட்டு வருகிறது.
- அடுத்த சில வாரங்களில் இஞ்சி அதிகளவில் சாகுபடி செய்வதற்கான பணிகளில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
கோவை,
கோவை மாவட்டத்தில் காந்திபுரம், ஆர்.எஸ்.புரம், தொண்டாமுத்தூர், பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் ஆகிய பகுதிகளில் காய்கறி சந்தைகள் உள்ளன. இங்கு உள்ளூர் விவசாயிகள் தங்கள் தோட்டம் மற்றும் விளை நிலங்களில் விளைந்த காய்கறிகளை விற்பனைக்காக கொண்டு வருகின்றனர்.
கோவை மார்க்கெட் மற்றும் காய்கறி சந்தைகளில் இஞ்சி விலை கிடுகிடுவென அதிகரித்தது.
தற்போதும் ஒரு கிலோ இஞ்சி ரூ.110 முதல் அதிகபட்சமாக ரூ.225 வரை விற்கப்பட்டு வருகிறது.
கோவை காய்கறி மார்க்கெட்டுகளில் கொடைக்கானல், ஊட்டி பகுதியில் இருந்து வரும் பச்சை பட்டாணி ரூ.110 முதல் ரு.194 வரையும், ஊட்டி அவரை ரு.110 முதல் ரூ.120 வரையும், சுண்டைக்காய் ரு.120 முதல் ரூ.150 வரையும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கோவை மார்க்கெட் வியாபாரிகள் கூறுகையில், கோவையில் தற்போது வெயில் அதிகளவில் உள்ளதால் பல்வேறு இடங்களில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக அங்கு சாகுபடி பாதிக்கப்பட்டு உள்ளது. எனவே கோவை மார்க்கெட்டுக்கு காய்கறிகள் வரத்து குறைந்து உள்ளது.
கோவை மற்றும் பல்வேறு மாவட்டங்களில் அடுத்த சில வாரங்களில் இஞ்சி அதிகளவில் சாகுபடி செய்வதற்கான பணிகளில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். இதனால் மார்க்கெட்டுக்கு வரத்து அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. அப்போது இஞ்சியின் விலை கட்டுக்குள் வந்து விடும் என்று தெரிவித்தனர்.