உள்ளூர் செய்திகள்
திருத்துறைப்பூண்டி சந்தையில் ஒரே நாளில் ரூ.1.5 கோடிக்கு ஆடுகள் விற்பனை
- திருச்சி உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்படும்.
- வாரந்தோறும் சராசரியாக ரூ.30 லட்சத்திலிருந்து, 40 லட்சம் வரை ஆடுகள் விற்பனையாகும்.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் வேதாரண்யம் சாலை பள்ளிவாசல் மைதானத்தில் வாரந்தோறும் வியாழக்கிழமையன்று ஆட்டுச் சந்தை நடைபெற்று வருகிறது.
இந்தச் சந்தையில் உள்ளூர் விவசாயிகள் மட்டுமன்றி மதுரை, ராஜகிரி, அறந்தாங்கி, புதுக்கோட்டை, மன்னார்குடி, வேதாரண்யம், தஞ்சாவூர், திருச்சி உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்படும். வாரந்தோறும் சராசரியாக ரூ.30 லட்சத்திலிருந்து ரூ.40 லட்சம் வரை ஆடுகள் விற்பனையாகும்.
இந்த நிலையில், நேற்று நடைபெற்ற சந்தையில் வழக்கத்தை விட கூடுதலாக வியாபாரிகள் ஆடுகளைக் கொண்டு வந்திருந்தனர். இதே போல ஆடுகளை வாங்கவும் ஏரா ளமானோர் வந்திருந்தனர்.
பக்ரீத் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், நேற்று ஒரே நாளில் ரூ.1.5 கோடிக்கு ஆடுகள் விற்பனை யானதாக சந்தை ஏற்பா ட்டாளர்கள் தெரிவித்தனர்.