உள்ளூர் செய்திகள்

பழைய பஸ்நிலையம் பகுதியில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் கீதாஜீவன் கேக் வெட்டி பொதுமக்களுக்கு வழங்கிய காட்சி.

உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் பிறந்த 25 குழந்தைகளுக்கு தங்க மோதிரம்- அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்

Published On 2022-11-28 09:25 GMT   |   Update On 2022-11-28 09:25 GMT
  • அமைச்சர் கீதாஜீவன் கேக் வெட்டி பொதுமக்களுக்கு வழங்கினார்
  • அரசு மருத்துவமனையில் பிறந்த 25 குழந்தைகளுக்கு அமைச்சர் கீதாஜீவன் தங்க மோதிரம் வழங்கினார்.

தூத்துக்குடி:

தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. ஏற்பாட்டின்படி மாநில இளைஞர் அணி செயலாளர் உதயநிதிஸ்டாலின் எம்.எல்.ஏ. 45-வது பிறந்தநாளையொட்டி பழைய பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாநகர செயலாளர் ஆனந்தசேகரன் தலைமை தாங்கினார்.

கேக் வெட்டினார்

வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் கேக் வெட்டி பொதுமக்களுக்கு வழங்கினார்.

விழாவில் துணை மேயர் ஜெனிட்டா, மாநகராட்சி மண்டலத் தலைவர்கள் வக்கீல் பாலகுருசாமி, கலைச்செல்வி, நிர்மல்ராஜ், மாவட்ட துணைச்செயலாளர்கள் ராஜ்மோகன் செல்வின், ஆறுமுகம், மாநகர துணைச்செயலாளர்கள் கீதாமுருகேசன், பகுதி செயலாளர்கள் ஜெயக்குமார், ரவீந்திரன், பொறியாளர் அணி அமைப்பாளர் அன்பழகன், மகளிர் அணி அமைப்பாளர் கஸ்தூரிதங்கம், தொண்டரணி அமைப்பாளர் ரமேஷ், தலைமை செயற்குழு உறுப்பினர் ராஜா, மாவட்ட அணி துணை அமைப்பாளர்கள் வக்கீல் சுபேந்திரன், பிரதீப், பார்வதி, நலம்ராஜேந்திரன், சீனிவாசன், அந்தோணிகண்ணன், மாநகர அணி நிர்வாகிகள் அருண்குமார், ஜெயக்கனி, முருகஇசக்கி, டேனியல், தேவதாஸ், பிரபு, வக்கீல் கிறிஸ்டோபர் மாவட்ட உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற மாவட்ட தலைவர் துரை, நிர்வாகிகள் பிரபு, ராஜகுரு, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தங்க மோதிரம்

பின்னர் அரசு மருத்துவமனையில் பிறந்த 25 குழந்தைகளுக்கு தங்க மோதிரம், ஹார்லிக்ஸ் ஆகியவற்றை அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார். அப்போது மருத்துவகல்லூரி டீன் சிவக்குமார், உறைவிட மருத்துவர் சைலஸ் ஜெபமணி ஆகியோர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News