உள்ளூர் செய்திகள்

100 ரோபோடிக் அறுவை சிகிச்சை செய்து தங்கம் மருத்துவமனை சாதனை

Published On 2022-09-18 08:41 GMT   |   Update On 2022-09-18 08:41 GMT
  • தங்கம் மருத்துவமனையில் 100 ரோபோடிக் அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளது.
  • நிகழ்ச்சியை சேலம் அரசு மருத்துவ மனை சிறுநீரகவியல் துறைத் தலைவர் டாக்டர். பெரியசாமி துவக்கி வைத்தார்.

நாமக்கல்:

ரோபோடிக் அறுவை சிகிச்சை தொழில் நுட்பம் பொதுவாக பெரியநகரங்களில் மட்டுமே கிடைக்கும்.

நாமக்கல் தங்கம் மருத்துவமனையில் 100 ரோபோடிக் அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளது. செப்டம்பர் மாதம் புரோஸ்டேட் புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக இருப்பதால், அதை கொண்டாடும் நிகழ்வில் தமிழகத்தை சேர்ந்த உயர்மட்ட சிறுநீரக மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியை சேலம் அரசு மருத்துவ மனை சிறுநீரகவியல் துறைத் தலைவர் டாக்டர். பெரியசாமி துவக்கி வைத்தார். சென்னையைச் சேர்ந்த ரோபோடிக் அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் அனந்தகிருஷ்ணன் சிவராமன், இந்த முயற்சி களுக்காக முழுக் குழுவையும் பாராட்டினார்.

புரோஸ்டேட் புற்றுநோய் மிகவும் பொதுவானதாகி வருகிறது மற்றும் ரோபோடிக் அறுவை சிகிச்சை இந்த புற்றுநோயக்கான சிறந்த தீர்வுகளை வழங்குகிறது, அதுமட்டுமின்றி உலகளவில் தரமான சிகிச்சையை தருகிறது. குறுகிய காலத்தில் 100 அறுவை சிகிச்சைகளை முடித்ததில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் " என்று ரோபோடிக் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர். ஸ்ரீதர் கூறினார். நிகழ்ச்சிக்கு டாக்டர். குழந்தைவேல் தலைமை வகித்து, நாமக்கல் தங்கம் மருத்துவமனையின் முக்கிய நோக்கம் சிறந்த தொழில்நுட்பங்கள் மலிவு விலையில் இருக்க வேண்டும் என்று கூறினார்.

Tags:    

Similar News