தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக பொன்விழா
- பல்கலைக்கழகத்தில் 25 ஆண்டுகளாக சிறப்பாக பணிபுரிந்த 236 நபர்களுக்கு சாதனையாளர்கள் விருது வழங்கப்பட்டது.
- தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் தொலை நிலைக் கல்வி பட்டத் தகுதி பெரும் விழா நடைபெற்றது.
வடவள்ளி:
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் பொன்விழா நிறுவனம் மற்றும் தொலை நிலைக் கல்வி பட்டத் தகுதி பெரும் விழா நடைபெற்றது.
பல்கலைக்கழகத்தில் 25 ஆண்டுகளாக சிறப்பாக பணிபுரிந்த 236 நபர்களுக்கு சாதனையாளர்கள் விருது வழங்கப்பட்டது. தொலை நிலைக் கல்வியில் பண்ணை பட்டய படிப்பில் 45 பேர், முதுநிலை பட்டப்படிப்பு படித்த 35 பேருக்கு பட்டச்சான்று வழங்கப்பட்டது.
இதில் இந்திய வானிலை ஆய்வு மைய முன்னாள் பொது இயக்குனரும், உலக வங்கி மற்றும் ஐக்கிய நாடுகளின் வளர்ச்சி திட்ட ஆலோசகருமான லஷ்மண் சிங் ரத்தோர் பங்கேற்று மாணவர்களுக்கு விருதுகளை வழங்கினார்.
இதில் கோவை மாநகர கமிஷனர் பாலகிருஷ்ணன், தமிழ்நாடு பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி, முன்னாள் துணை வேந்தர்கள் முருகேச பூபதி, அப்பதுல்கரீம், ராமசாமி, ராமசாமி, பல்கலைக்கழக உயர் அதிகாரிகள், தொலைநிலை கல்வி மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.