தென் திருப்பேரை சிவன் கோவிலில் கோமாதா பூஜை
- பா.ஜ.க. கூட்டுறவு பிரிவு சார்பில் மோடியின் பெயரில் ஊர் தலைவர் முருகேசன் தலைமையில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
- கோமாதா பூஜை தொழிலதிபர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.
தென்திருப்பேரை:
நவ கைலாய தலமான தென்திருப்பேரை கைலாச நாதர் கோவிலில் பிரதமர் மோடியின் 72- வது பிறந்த நாளை முன்னிட்டு பா.ஜ.க. கூட்டுறவு பிரிவு சார்பில் மோடியின் பெயரில் ஊர் தலைவர் முருகேசன் தலைமையில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
தென்திருப்பேரை சுற்று வட்டார தேவேந்திர குல வேளாளர் ஆன்மீக அறக்கட்டளை துணைத் தலைவர்கள் சவுந்திர ராஜன், இசக்கித் துரை முன்னிலையில் சிறப்பு அர்ச்சனை மற்றும் கோமாதா பூஜை தொழிலதிபர், அரசு ஒப்பந்ததாரர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.
மாநில கூட்டுறவு பிரிவு செயலாளர் மாரிதுரைசாமி, விவசாய அணி மாநில திட்ட பொருப்பாளர் தமிழ் செல்வி, பொருளாளர் மகாதேவன், நிர்வாகி கோமதி ராஜ், மண்டல துணைத் தலைவர் கோவிந்த ராஜன், மாவட்ட துணைத்தலைவர் ரேவதி கண்ணன், மண்டல கூட்டுறவு பிரிவு தலைவர் ஜெயசிங், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கரும்பன், வெங்கடேஸ்வர செல்வராஜ், நல வாரிய மாவட்ட தலைவர் குமார், கலை, கலாச்சார பிரிவு மாவட்ட செயலாளர் முத்துமாரி செல்வி, பேரவை நகர செயலாளர் பெருமாள் என்ற குமார், பிரச்சார பிரிவு ஒன்றிய செயலாளர் முருக பெருமாள், மண்டல மகளிரணி தலைவி காமினி உள்பட பா.ஜ.க.வினர் பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின் முடிவில் பக்தர்க ளுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடு களை கூட்டுறவு பிரிவு மாநில செயலாளர் மாரி துரைசாமி, நிர்வாகி கோமதி ராஜ் செய்திருந்தனர்.