உள்ளூர் செய்திகள்

கோவிந்தபுரம் பாண்டுரங்கன் கோவிலில் கோபூஜை வழிபாடு நடைபெற்றது.

கோவிந்தபுரம் பாண்டுரங்கன் கோவிலில் 1000 பசுக்களுக்கு கோபூஜை

Published On 2023-01-17 09:12 GMT   |   Update On 2023-01-17 09:12 GMT
  • கோசாலையில் 1000-க்கும் மேற்பட்ட பசுக்கள், கன்றுகள், காளைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது.
  • பசுக்களை வழிபடுவதன் மூலம் நமது வாழ்வில் சகல விதமான சவுபாக்கியங்களும் கிட்டும்.

சுவாமிமலை:

கும்பகோணம் அடுத்த கோவிந்தபுரத்தில் பாண்டுரங்கன் கோவில் உள்ளது.

இக்கோவிலில் உள்ள கோசாலையில் 1000-க்கும் மேற்பட்ட பசுக்கள், கன்றுகள், காளைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், மாட்டு பொங்கலை முன்னிட்டு உலக மக்கள் நன்மைக்காக கோபூஜை வழிபாடு நடைபெற்றது.

இதில் நூற்றுக்கணக்கான தம்பதியினர் ஒரே நேரத்தில் கோசாலையில் இருக்கும் பசுக்களுக்கு மஞ்சள் குங்குமமிட்டு, வேத பண்டிதர் மந்திரங்கள் கூற அதனை திரும்ப கூறி, உதிரி மலர்களாலும், மஞ்சள் தடவிய அட்சதைகளாலும் பூஜைகள் மற்றும் அர்ச்சனை செய்தும், தீபங்கள் காட்டியும் வழிபட்டனர்.

பின், பசுக்களுக்கு வாழைப்பழங்களையும், கரும்புகளையும் உணவாக அளித்தனர்.

பசுக்களை வழிபடுவதன் மூலம் நமது வாழ்வில் சகல விதமான சவுபாக்கி யங்களும் கிட்டும் மற்றும் அனைத்து விதமான தெய்வங்களையும், தேவர்களையும் வழிபட்ட பலன் கிட்டும் என்பதும் ஐதீகம் என்கின்றனர்.

Tags:    

Similar News