உள்ளூர் செய்திகள்

மார்ச் 15-ந் தேதி வரை அரசு போக்குவரத்து ஓய்வூதியர்கள் உயிர்வாழ் சான்று சமர்ப்பிக்கலாம்

Published On 2023-01-05 09:35 GMT   |   Update On 2023-01-05 09:35 GMT
  • பணிபுரிந்த கிளைகள் அல்லது வீட்டிற்கு அருகாமையில் உள்ள கிளைகளில் வருகிற மார்ச் மாதம் 15ஆம் தேதி வரை உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்கலாம்.
  • சான்று சமர்ப்பிக்க ஆதார் கார்டு, பான்கார்டு நகல்களுடன், பாஸ்போர்ட் சைஸ் கலர் போட்டோ ஒன்று கொண்டுசெல்ல வேண்டும்.

தஞ்சாவூர்:

கும்பகோணம் மண்டலம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற வர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்கள் 2023 ஆம் ஆண்டிற்குரிய உயிர் வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்க அவரவர்கள் பணிபுரிந்த கிளைகள் அல்லது வீட்டிற்கு அருகாமையில் உள்ள கிளைகளில் வருகிற மார்ச் மாதம் 15ஆம் தேதி வரை உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்கலாம்.

சான்று சமர்ப்பிக்க ஆதார் கார்டு, பான்கார்டு நகல்களுடன், பாஸ்போர்ட் சைஸ் கலர் போட்டோ ஒன்று கொண்டுசெல்ல வேண்டும்.

குடும்ப ஓய்வூதியம் பெற்று வரும் பெண் ஓய்வூதியர்கள் ஆதார் கார்டு, பான்கார்டு நகல்களுடன், பாஸ்போர்ட் சைஸ் கலர் போட்டோ ஒன்றுடன், அப்பகுதி கிராம நிர்வாக அலுவலரிடம் மறுமணம் செய்து கொள்ளவில்லை என சான்றிதழ் பெற்று சென்று சமர்ப்பிக்க வேண்டும்.

உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்க சந்தேகங்கள் மற்றும் உதவிகள் தேவைப்பட்டால் தஞ்சாவூர் கீழராஜவீதி அரண்மனை எதிரில் உள்ள மாவட்ட ஏ. ஐ .டி .யூ .சி அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். மேலும் கும்பகோணம் மண்டல ஏ.ஐ.டி.யூ.சி ஓய்வு பெற்றோர் சங்க பொதுச் செயலாளர் அப்பாதுரையை 9566715758 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு உதவிகள் பெற்றுக் கொள்ளலாம்.

மேற்கண்ட தகவலை கும்பகோணம் மண்டல ஏ.ஐ.டி.யூ.சி ஓய்வூதியர் சங்கம் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News