உள்ளூர் செய்திகள் (District)

கோத்தகிரி அருகே செம்மநாரை பழங்குடியின கிராமத்துக்கு அரசு பஸ் இயக்கம்

Published On 2023-04-17 09:41 GMT   |   Update On 2023-04-17 09:41 GMT
  • இந்த கிராமங்களுக்கு இதுவரை பஸ் வசதி கிடையாது.
  • பல ஆண்டுக்கு பிறகு பஸ் சேவை தொடங்கியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஊட்டி,

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே உள்ள பழங்குடியினர் கிராமம் செம்மநாரை.

இந்த கிராமத்தை சுற்றி கனுவட்டி, கோழிக்கரை, மேல் கூப்பு, கீழ் கூப்பு, தாலமொக்கை உள்ளிட்ட கிராமங்களும் உள்ளன.

இந்த கிராமங்களில் ஏராளமான பழங்குடியினர் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இந்த கிராமங்களுக்கு நாடு சுதந்திரம் அடைந்து பல ஆண்டுகளை கடந்தும் இதுவரை பஸ் வசதி கிடையாது. நடந்தே பல பகுதிகளுக்கும் இந்த கிராமங்களை சேர்ந்தவர்கள் சென்று வந்தனர். எங்கள் பகுதிக்கு பஸ் இயக்க வேண்டும் என பழங்குடியின மக்கள் பல ஆண்டுகளாக, மாவட்ட நிர்வாகம் மற்றும் அரசுக்கு மனு அளித்து வந்தனர்.

இந்த நிலையில் பழங்குடியின கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று மாவட்ட நிர்வாகம் மூலம் அந்த கிராம பகுதிகளில் சாலை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள ப்பட்டது.

கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கோத்தகிரியில் இருந்து செம்மநாரை வரை பஸ் இயக்கி வெள்ளே ாட்டமும் பார்க்கப்பட்டது.

இதில் வெள்ளோட்டம் வெற்றி பெற்றதை அடுத்து நேற்று கோத்தகிரி அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து செம்மநாரைக்கு அரசு பஸ் இயக்கப்பட்டது.

பஸ்சை நீலகிரி எம்பி ஆ.ராசா கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித், நீலகிரி மாவட்ட தி.மு.க செயலாளர் முபாரக், மாவட்ட ஊராட்சி தலைவர் பொன்தோஷ், கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் ராம்குமார், கோத்தகிரி ஒன்றிய செயலாளர் நெல்லை கண்ணன், மாவட்ட போக்கு வரத்து கழக மேலாளர் நட்ராஜ், கோத்தகிரி போக்குவரத்து பணிமனை மேலாளர் ஞான பிரகாஷ், தொழிலாளர் முன்னேற்ற சங்க செயலாளர் குமார், தலைவர் ரத்தனகுமார், பொருளாளர் ஸ்டீபன் மற்றும் ஆனந்தன், நிரேஷ்கு மார், கோபாலகிருஷ்ணன், யோகரத்தினம், ராமலிங்கம், ரவி, குமார், எர்க்குலர்ஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News