உள்ளூர் செய்திகள்

போக்குவரத்து கழக பொது மேலாளரிடம் ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. மனு அளித்த காட்சி.

கோமானேரி, கலுங்குவிளை, நெடுங்குளம் வழியாக அரசு பஸ் சேவை - ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. போக்குவரத்து பொதுமேலாளரிடம் மனு

Published On 2023-01-29 09:21 GMT   |   Update On 2023-01-29 09:21 GMT
  • நெல்லை போக்குவரத்து கழக பொது மேலாளரை ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. சந்தித்து மனு அளித்தார்.
  • நெல்லையில் இருந்து சிந்தாமணி,பழனியப்பபுரம் வழியாக சாத்தான்குளத்திற்கு பஸ் சேவை வழங்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.

சாத்தான்குளம்:

சாத்தான்குளம் அருகே உள்ள கோமானேரி, கலுங்குவிளை, நெடுங்குளம், கொம்பன்குளம், வழியாக சாத்தான்குளத்துக்கு அரசு பஸ் சேவை இல்லாமல் உள்ளது. பேய்க்குளத்தில் இருந்தும், கோமானேரி, கலுங்குவிளை, நெடுங்குளம், துவர்குளம், கொம்பன்குளம், மேட்டுக்குடியிருப்பு வழியாக சென்ற அரசு பஸ்சும் நிறுத்தப்பட்டதால் மக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர்.

இதையடுத்து சாலைபாதுகாப்பு நுகர்வோர்குழு உறுப்பினர் போனிபாஸ், ஒன்றிய கவுன்சிலர் ப்ரெனிலா கார்மல் ஆகியோர் ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ.விடம் முறையிட்டனர். அவர்களது கோரிக்கையை ஏற்று நெல்லை போக்குவரத்து கழக பொது மேலாளரை ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. சந்தித்து மனு அளித்தார். அதில், சாத்தான்குளத்தில் இருந்து கலுங்குவிளை, நெடுங்குளம், முனைஞ்சிப்பட்டி வழியாக நெல்லைக்கு இயக்கப்பட அரசு பஸ் தடம் 65 இ, தடம் எண் 165 எச் இரவு நெல்லையில் இருந்து முனைஞ்சிப்பட்டி, கலுங்குவிளை வழியாக சாத்தான்குளத்துக்கு இயக்கப்பட வேண்டும் எனவும், அதேப்போல் தடம் எண் 137ஏ, 137கே ஆகிய பஸ்களை காலை, மாலை, நெல்லையில் இருந்து சிந்தாமணி, பேய்க்குளம், பழனியப்பபுரம் வழியாக சாத்தான்குளம், உடன்குடிக்கும், விராக்குளம், பிரண்டார்குளம், மடத்துவிளை, கலுங்குவிளை, வழியாக சாத்தான்குளத்துக்கும் இயக்கப்பட்டு வந்தது, தற்போது இயக்கப்படாததால் மீண்டும் கலுங்குவிளை, நெடுங்குளம் வழியாக இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என முறையிட்டனர்.

Tags:    

Similar News