உள்ளூர் செய்திகள் (District)

சீர்காழியில் நடைபெற்ற இந்து முன்னணி பொதுக்கூட்டம்.

கோவில்களை அரசு பாதுகாக்க வேண்டும்-தருமபுரம் சொக்கலிங்கம் தம்பிரான் சுவாமிகள் பேச்சு

Published On 2022-07-10 09:55 GMT   |   Update On 2022-07-10 09:55 GMT
  • ஆன்மிக வாதிகள் அரசியில் பேசக்கூடாது என சொல்கிறார்கள்.
  • இந்துமதத்தின் பெருமையை நமது வழிப்பாடுமுறையை நாம் உணராமல் இருப்பது வருத்தத்குரியது.

சீர்காழி:

சீர்காழியில் இந்து முன்னணி சார்பில் இந்துக்களின் உரிமை மீட்க பிரச்சாரபயண பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு இந்து முன்னணி மாவட்ட தலைவர் கே.சரண்ராஜ் தலைமை வகித்தார். மாவட்ட பொது செயலாளர்சுவாமிநாதன், ஒன்றிய அமைப்பாளர் பூபதிவசந்தன் முன்னிலை வகித்தனர். நகரத்தலைவர் நாகமுத்து வரவேற்றார்

கூட்டத்தில் மாநில தலைவர் காடேஸ்வரா.சி.சுப்பிரமணியம் பங்கேற்று சிறப்புறையாற்றினார்.தொடர்ந்து சீர்காழி சட்டைநாதர்சுவாமி தேவஸ்தான கட்டளை சொக்கலிங்கம் தம்பிரான் சுவாமிகள் பங்கேற்று பேசுகையில், நாம் காலம், காலமாக நமது வழிப்பாட்டு முறையை மீட்கவும், பாதுகாக்கவும் போராடும் நிலை உள்ளது.

ஆன்மிக வாதிகள் அரசியில் பேசக்கூடாது என சொல்கிறார்கள்.ஆனால் இங்கு பலஅரசியல் வாதிகள் ஆன்மிகவாதிகளை பற்றி எதைவேண்டுமானாலும் பேசலாம் என பேசுகின்றனர். இந்துக்களுக்கு இந்து முன்னணி இயக்கமும், இந்து மக்கள் கட்சி இயக்கம் போன்ற இயக்கங்கள் தான் உண்மையாக இருக்ககூடியது.

இந்துமதத்தின் பெருமையை நமது வழிப்பாடுமுறையை நாம் உணராமல் இருப்பது வருத்தத்குரியது. அரசு என்பது கோயில்களைபாதுகாத்து நல்லவழிபடுத்த இருக்கவேண்டுமே தவிர, இடையூறு ஏற்படுத்தகூடாது. பல கோயில்கள் வழிபாடு இல்லாமல் இருக்கின்றன.

கொரோனா காலத்தில் அதிகமாக பாதிக்கப்பட்டும், அடக்குமுறைக்கு உள்ளானது இந்துஆலயங்களும், ஆலய வழிபாட்டு முறைகள் தான். நமது சமயத்தின் பல்வேறு வகையான கொள்கைகளை உள்ளடக்கியது. பட்டினபிரவேசத்திற்கு இந்து முன்னணிதான் முழுமூச்சாக முதலில் குரல் கொடுத்தது. இந்து கோயில்களின் வழிபாட்டிற்கு மட்டும் தான் அறநிலையத்தறையிடம் அனுமதி கேட்கும் நிலை உள்ளது. தமிழகத்தின் வழிபாட்டு முறை உலகத்திற்கே வழிகாட்டு முறையாக இருக்கிறது.கோயில்களை காப்பாற்ற போராடும் நிலை உள்ளது.

ஆலய வழிபாட்டில் இன்னும் சுதந்திரம் அடையவேண்டிய தூரம் நிறைய உள்ளது. அதற்கு நாம்ஒற்றுமையுடன் செயல்படவேண்டும் என்றார்.இந்த கூட்டத்தில் பாஜக நகர தலைவர் முருகன், விஎச்பி பொறுப்பாளர் செந்தில்குமார் மற்றும் இந்துஅமைப்பினர் திரளாக பங்கேற்றனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை மயிலாடுதுறை எஸ்பி. நிஷா மேற்பார்வையில் 2 டிஎஸ்பிக்கள், 4 இன்ஸ்பெக்டர் மற்றும் 50க்கும் மேற்பட்ட போலீசார் பங்கேற்றனர்.

Tags:    

Similar News