கோவில்பட்டி நேஷனல் என்ஜினீயரிங் கல்லூரியில் பட்டமளிப்பு விழா
- சென்னை அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் பேராசிரியர் ஆர்.வேல்ராஜ் சிறப்பு விருந்தின ராக பங்கேற்று பட்டங்களை வழங்கினார்.
- விழாவில், 596 மாணவர்களுக்கு இளநிலை பொறியியல் பட்டங்கள் வழங்கப்பட்டது.
கோவில்பட்டி:
கோவில்பட்டி நேஷனல் என்ஜினீயரிங் கல்லூரியின் 35-வது பட்டமளிப்பு விழா கல்லூரி கலையரங்கத்தில் நடைபெற்றது.
கல்லூரியின் துணைத் தலைவர் கே.ஆர்.கிருஷ்ண மூர்த்தி தலைமை தாங்கி னார். செயலாளர் சி.சங்கர நாராயணன், தாளாளர் கே.ஆர்.அருணாசலம், தொழிலதிபர் சி.ராமசாமி, இயக்குநர் எஸ்.சண்முக வேல் மற்றும் முதல்வர் கே.காளிதாச முருகவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கல்லூரி முதல்வர் வரவேற்புரை நிகழ்த்தி கல்லூரியின் சிறப்பு அம்சங்களை விவரித்தார். சென்னை அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் பேராசிரியர் ஆர்.வேல்ராஜ் சிறப்பு விருந்தின ராக பங்கேற்று பட்டங்களை வழங்கி, பட்டமளிப்பு விழா சிறப்புரை நிகழ்த்தினார்.
சிறப்பு விருந்தினர் பட்ட தாரிகளை வாழ்த்தி தனது உரையை துவங்கினார், அவர் தமது உரையில் பட்ட தாரிகள் பல்வேறு துறை சார்ந்த தொழில்நுட்ப அறிவை பெறவேண்டும் என்றும் அவற்றின் முக்கி யத்துவம் பற்றியும் எடுத்துரைத்தார்.
மாணவ தொழில்முனை வோர்கள் நிதி ஆயோக் போன்ற அரசாங்க திட்டத்தின் மூலம் நிதி ஆதரவை பெற்று சிறந்த தொழில்முனைவோராக வேண்டும் என்றும், அவர்கள் இந்தியாவில் தனித்துவமான, புதுமை யான தயாரிப்புகளை உரு வாக்க வேண்டும் என்றும், நன்கு வரையறுக்கப்பட்ட வணிகத் திட்டங்களே வெற்றிக்கான பாதைகளாக அமையும் என்றும் அறிவுறுத்திக் கூறினார்.
விழாவில், 596 மாணவர்க ளுக்கு இளநிலை பொறியியல் பட்டங்களையும், 24 மாணவர்களுக்கு முதுநிலை பொறியியல் பட்டங்களை யும் சிறப்பு விருந்தினர் வழங்கினார்.
மேலும், பட்டம் பெற்றவர்களில் 41 இளநிலை மற்றும் முதுநிலை பொறியியல் மாணவர்கள் தன்னாட்சி தரவரிசைப் பட்டியலில் இடம் பெற்ற வர்கள் என்பது குறிப்பிடத் தக்கது. மேலும், பட்டதாரி கள் அனைவரும் பட்ட மளிப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
விழாவில் சிறப்பு விருந்தி னர்களாக லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் பேராசிரி யர் ஏ.ராஜேஸ்வரன், கே.ஆர்.கலை மற்றும் அறிவியியல் கல்லூரி முதல்வர் எஸ்.மதிவண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை கல்லூரியின் இயக்குநர் மற்றும் முதல்வர் ஆகியோரது வழிகாட்டு தலின்படி ஒருங்கிணைப்பா ளர்கள் பேராசிரியர் டி.வெங்கட்குமார், உதவிப் பேராசிரியர் எ.ஆண்ட்ரூஸ், அனைத்துத் துறைத் தலைவர்கள், பேராசிரி யர்கள் மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.