நாஞ்சிக்கோட்டை ஊராட்சியில் கிராம சபை கூட்டம்
- நாஞ்சிக்கோட்டை ஊராட்சியில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனர்.
- இந்த பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும்.
தஞ்சாவூர்:
தஞ்சை அருகே நாஞ்சி க்கோட்டை கிராமம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் நாஞ்சி.கி.வ.சத்தியராஜ் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
மழைக் காலங்களில் பொதுமக்கள் குடிநீரை காய்ச்சி வடிகட்டி குடிக்க வேண்டும்.
நாஞ்சிக்கோட்டை ஊராட்சியில் 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.
இந்த பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என்று சட்டமன்ற உறுப்பினர் மூலம் முயற்சி மேற்கொண்டுள்ளோம்.
அதற்கு பழனியப்பன் நகரில் இடம் ஒதுக்கி உள்ளோம். நமது ஊராட்சியில் பல்வேறு வளர்ச்சி பணிகள் மாவட்ட ஆட்சியர், அதிகாரிகள் மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் ஒன்றியக் குழு உறுப்பினர்கள் ஒத்துழை ப்புடன் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக ஊராட்சி செயலாளர் புண்ணியமூர்த்தி வரவேற்று, தீர்மானங்களை படித்தார்.
கூட்டத்தில் ஒன்றியக் குழு உறுப்பினர்கள் வண்டார்குழலி நிம்மி, சகாயராணி, கல்பனா, வாசுதேவன், தாழம்பட்டி மதியழகன் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் உமாமகேஸ்வரி தோட்டக் கலை துறை உதவி இயக்குநர் முத்தமிழ் செல்வி பள்ளி தலைமை ஆசிரியர்கள் சாந்தி, விஜயரேவதி மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.