தஞ்சை விளார் ஊராட்சியில் கிராமசபை கூட்டம்
- தஞ்சை விளார் ஊராட்சியில் கிராமசபை கூட்டம் நடை பெற்றது.
- இதில் சாலை வசதி, குடிநீர் வசதி, நிழற்குடை சீரமைத்தல், ஆக்கிரமிப்பு அகற்றுதல், தெருவிளக்குகள் சீரமைத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை பொதுமக்கள் வைத்தனர்.
தஞ்சாவூர்:
தஞ்சை ஊராட்சி ஒன்றியம் விளார் ஊராட்சியில் குடியரசு தின சிறப்பு கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு தலைவர் மைதிலி ரெத்தினசுந்தரம் தலைமை தாங்கினார். டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுப்பது குறித்தும், தூய்மை பணிகள் மேற்கொள்வது, சுத்தமான குடிநீர் வழங்குவது, 100 நாள் வேலை திட்ட பணிகள் மேற்கொள்வது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.
இதில் சாலை வசதி, குடிநீர் வசதி, நிழற்குடை சீரமைத்தல், ஆக்கிரமிப்பு அகற்றுதல், தெருவிளக்குகள் சீரமைத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை பொதுமக்கள் வைத்தனர் . அதனை சரி செய்வது தருவதாக ஊராட்சி மன்ற நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. கூட்டத்தில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அதிகாரி சித்ரா, தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்திபன் மற்றும் ஊராட்சி மன்ற துணைத் தலைவர், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் ஊர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி செயலர் ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.