உள்ளூர் செய்திகள்

கிராம சபை கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் சுகபுத்ரா கலந்து கொண்டார்.

வடக்குமாங்குடி ஊராட்சியில் கிராம சபை கூட்டம்

Published On 2023-01-27 09:49 GMT   |   Update On 2023-01-27 09:49 GMT
  • பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி தடை செய்தல் போன்ற பல்வேறு திட்டங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
  • பொதுமக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தஞ்சாவூர்:

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகா வடக்குமாங்குடி ஊராட்சியில் குடியரசு தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் (வருவாய்) சுகபுத்ரா பேசியதாவது:-

கிராம ஊராட்சிகளில் நீடித்த வளர்ச்சி இலக்குகள் நிர்ணயம் செய்தல் தொடர்பாக தஞ்சாவூர் மாவட்டத்தில் 589 ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது .

அந்த வகையில் வடக்குமாங்குடி ஊராட்சியில் நடந்த கிராமசபை கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்தும், நடை பெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் முன்னேற்றம் மற்றும் நிதி செலவினங்கள் குறித்தும், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், ஊட்டச்சத்து இயக்கம், பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி தடை செய்தல், தூய்மை பாரத இயக்கம், ஜல் ஜீவன் திட்டம், வேளாண்மை உழவர் நலத்துறை, நமக்கு நாமே திட்டம், மகளிர் திட்டம் மற்றும் முதியோர் உதவி எண், விவசாயிகள் கடன் அட்டை போன்ற பல்வேறு திட்டங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

மேலும் பொதுமக்களுடைய பல்வேறு கோரிக்கைகளை கேட்டறிந்து விரைந்து முடித்திட அனைத்து துறை அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது .இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் பாபநாசம் தொகுதி எம்.எல்.ஏ. ஜவாஹிருல்லா, ஒன்றிய குழு தலைவர் சுமதி கண்ணதாசன், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) சங்கர், பாபநாசம் தாசில்தார் பூங்கொடி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவக்குமார், ஆனந்தராஜ் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News