உள்ளூர் செய்திகள்

கலெக்டர் மகாபாரதி.

241 ஊராட்சிகளிலும் வருகிற 22-ந் தேதி கிராமசபா கூட்டம்- கலெக்டர் தகவல்

Published On 2023-03-20 09:24 GMT   |   Update On 2023-03-20 09:24 GMT
  • பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி தடைசெய்தல்.
  • 100 சதவீதம் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்ட ஊராட்சிகளுக்கு கிராம சபையில் தீர்மானம்.

சீர்காழி:

மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி வெளி யிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது;-

மயிலாடுதுறை மாவட்டத்தில் வருகிற 22-ந் தேதி (புதன்கிழமை) தண்ணீர் தினத்தன்று கிராமசபா கூட்டம் 241 கிராம ஊராட்சிகளிலும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நடைபெற உள்ளது.

இக்கிராமசபா கூட்டத்தில் உலக தண்ணீர் தினத்தின் கருப்பொருளினைப் பற்றி விவாதித்தல், கிராம ஊராட்சி நிர்வாகம், பொது நிதியில் மேற்கொள்ளப்பட்ட செலவினம், 2022-23 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட பணிகள் விவரம் குறித்து விவாதித்தல், சுத்தமான் குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்வது குறித்து விவாதித்தல், ஊரக பகுதிகளில் விரிவான கிராம சுகாதாரம் பற்றி எடுத்துரைத்தல், பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி தடைசெய்தல், ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ் ஊராட்சியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் 100 சதவீதம் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்ட ஊராட்சிகளுக்கு கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றுதல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து இக்கிராமசபையில் விவாதிக்கப்பட உள்ளது.

எனவே, இக்கிராமசபா கூட்டத்தில் அனைத்து ஊராட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் தவறாது கலந்து கொண்டு கோரிக்கைகள் மற்றும் மறுப்புகள் தொடர்பான விபரங்களை விவாதித்திட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News