உள்ளூர் செய்திகள்
589 ஊராட்சிகளிலும் நாளை கிராமசபை கூட்டம்- கலெக்டர் தகவல்
- பொதுமக்களுடன் அனைத்து துறை அலுவலர்களும் பங்கேற்று விவாதிக்க உள்ளனர்.
- பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது ;-
நாளை (புதன்கிழமை) உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 589 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது.
இந்த கூட்டத்தில், கிராம ஊராட்சிகளின் வளர்ச்சி திட்டங்கள் குறித்து பொதுமக்களுடன் அனைத்து துறை அலுவலர்களும் பங்கேற்று விவாதிக்க உள்ளனர்.
எனவே இந்த கிராம சபை கூட்டத்திற்கு மாவட்டத்தின் கிராம ஊராட்சி பகுதியில் உள்ள பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்திட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.