உள்ளூர் செய்திகள்

கலெக்டர் விஷ்ணு.

மீன் வளர்ப்பினை ஊக்குவிக்க மானியம் - கலெக்டர் விஷ்ணு தகவல்

Published On 2022-07-31 09:35 GMT   |   Update On 2022-07-31 09:35 GMT
  • மீன்குஞ்சு, மீன் தீவனம், உரங்கள், மீன் வளர்ப்பிற்கான உள்ளீட்டு பொருட்கள் மற்றும் பறவை தடுப்பு வேலி அமைத்தல் ஆகியவற்றிற்கு 50 சதவீத மானியத்துடன் கூடிய திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
  • பயனாளியின் சிறு, குறு விவசாயி சான்றிதழ் மற்றும் பண்ணைக் குட்டை அமைந்துள்ள நிலம் தொடர்பான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

நெல்லை:

நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

நெல்ைல மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் அலுவலகம் மூலம் பல்நோக்கு பண்ணைக்குட்டைகளில் கிப்ட் திலேப்பியா மீன் வளர்ப்பினை ஊக்குவிக்க உள்ளீட்டு மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் 2022-23-ம் ஆண்டு 250 முதல் 1000 சதுர மீட்டர் அளவிலுள்ள பண்ணைக்குட்டையில் கிப்ட் திலேப்பியா மீன்வளர்ப்பினை மேற்கொள்ள ஏதுவாக மீன்குஞ்சு, மீன் தீவனம், உரங்கள், மீன் வளர்ப்பிற்கான உள்ளீட்டு பொருட்கள் மற்றும் பறவை தடுப்பு வேலி அமைத்தல் ஆகியவற்றிற்கு 50 சதவீத மானியத்துடன் கூடிய திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

இத்திட்டத்தினை செயல்படுத்திட அலகு ஒன்றுக்கு ஆகும் மொத்த செலவினமான ரூ.36 ஆயிரத்தில் 50 சதவீத மானியமாக ஒரு பண்ணைக்குட்டைக்கு ரூ.18 ஆயிரம் வழங்கப்படும்.

மேற்கண்ட மானியமானது பின்னேற்பு மானியமாக வழங்கப்படும் மற்றும் நிர்ணயிக்கப்பட்ட இலக்கிற்கு ஏற்றவாறு திட்ட வழிகாட்டு நெறிமுறைகளின்படி தகுந்த பயனாளிகளின் விண்ணப்பங்கள் பதிவு மூப்பு அடிப்படையில் முன்னுரிமை வழங்கப்படும். மேலும் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறுவதற்கு பயனாளியின் சிறு, குறு விவசாயி சான்றிதழ் மற்றும் பண்ணைக் குட்டை அமைந்துள்ள நிலம் தொடர்பான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். பயனாளி மாவட்ட மீன்வளர்ப்போர் மேம்பாட்டு முகமையில் உறுப்பினராக இருத்தல் வேண்டும். பயனாளி இதற்கு முன்னர் கிப்ட் திலேப்பியா மீன்வளர்ப்பு செய்திட மானியம் பெற்றவராக இருத்தல் கூடாது.

இத்திட்டத்தில் பயன்பற விரும்புவோர் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் அலுவலகம், 42C, 26-வது குறுக்குத்தெரு, மகாராஜா நகர், நெல்லை-627011 என்ற அலுவலக முகவரியில் வருகிற 4-ந்தேதிக்குள் நேரில் விண்ணப்பித்திட கேட்டுக் கொள்ளப்படுகிறது.மேலும் விபரங்களுக்கு 9384824355 அல்லது 9384824280 என்ற தொலைப்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News