சேலம் மாவட்டத்தில் மகளிர் பால் உற்பத்தியாளர் சங்கம் அமைத்திட மானியம்
- சேலம் மாவட்டத்திற்கு ஒரு ஆதிதிராவிடர் மகளிர் மற்றும் ஒரு பழங்குடியின மகளிருக்கு தலா ரூ.1 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- இதில் சேலம் மாவட்டத்திற்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தலா ஒரு கூட்டுறவு பால் உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்கத்திற்கு மானியம் ரூ.1 லட்சம் வழங்கப்படுகிறது.
சேலம்:
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களின் பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் 50 உறுப்பினர்களைக் கொண்ட மகளிர் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் அமைக்க சேலம் மாவட்டத்திற்கு ஒரு ஆதிதிராவிடர் மகளிர் மற்றும் ஒரு பழங்குடியின மகளிருக்கு தலா ரூ.1 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்திற்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சரின் அறிவிப்பில், 36 ஆதி திராவிடர்களுக்கும், 4 பழங்குடியினருக்கும் தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும் பொருளாதார மேம்பாட்டுத்தி ட்டத்தின் கீழ் 50 உறுப்பினர் களைக் கொண்ட மகளிர் கூட்டு றவு பால் உற்பத்தி யாளர் கூட்டுறவுச் சங்கங்கள் அமைத்திட ஆணையிடப் பட்டுள்ளது.
இதில் சேலம் மாவட்டத்திற்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தலா ஒரு கூட்டுறவு பால் உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்கத்திற்கு மானியம் ரூ.1 லட்சம் வழங்கப்படுகிறது. இதற்கு குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 இலட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். கறவை மாடு வைத்துள்ள மற்றும் பால் உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்கங்களில் உறுப்பினராக உள்ள மகளிர் இத்திட்டத்தில் பயன் பெறலாம். இத்திட்டத்தில் பயன்பெற ஆதிதிராவிடர் பயனாளிகள் https://application.tahdco.com என்ற இணையதளத்திலும், பழங்குடியினர் பயனாளிகள் https://fast.tahdco.com, https://fast.tahdco.com, ://fast.tahdco.com, https://fast.tahdco.com என்ற இணையதளத்திலும் பதிவு செய்து பயன்பெறலாம் என்று மாவட்ட கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.