உள்ளூர் செய்திகள்

குறைதீர் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம்.

கொடைக்கானலில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

Published On 2023-10-17 08:09 GMT   |   Update On 2023-10-17 08:09 GMT
  • கொடைக்கானல் கோட்டாட்சியர் மற்றும் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் முன்னிலையில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.
  • விவசாய நிலங்களை அழிக்கும் காட்டு யானைகள், காட்டு பன்றிகளை ஒழிக்க வனத்துறை நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை வைத்தனர்.

கொடைக்கானல்:

கொடைக்கானல் கோட்டாட்சியர் மற்றும் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் முன்னிலையில் விவசாயி கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் விவசாயிகள் தங்களது குறைகளை எடுத்துரை த்தனர்.சமீப காலமாக விவசாய நிலங்களுக்குள் யானைகள்,காட்டுப் பன்றிகள் புகுந்து பண பயிர்களை அழித்து வருவதாகவும் இதனை தடுக்க வனத்துறையினரும் நடவடிக்கை எடுப்பதில்லை எனவும் குற்றச்சாட்டை முன் வைத்தனர்.

மேலும் சமீப காலமாக பேரிக்காய், ப்ளம்ஸ் விளைச்சல் கடுமையாக பாதிப்படைந்துள்ளதையும் இவ்வகை விவசாயத்தில் நோய் தாக்குதல் அதிகரி த்துள்ளதையும் இதனை ஆய்வு செய்து பேரிக்காய், பிளம்ஸ் விளைச்சல்களை கூட்டுவதற்கு வேளாண் துறை நடவடிக்கை எடுக்க வும் கேட்டுக் கொண்டனர்.விவசாய நிலங்களை அழிக்கும் காட்டு யானைகள், காட்டு பன்றிகளை ஒழிக்க வனத்துறை நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை வைத்தனர்.கிராமப் பகுதி களில் கேஸ் சிலிண்டர்கள் அதிக விலைக்கு விற்க ப்படுவ தாகவும், மேல்மலை பகுதிகளில் விவசாயப் பகுதிகள் இணைப்பு சாலையை விரைந்து சீரமைக்கவும்,சாலைகளை சீரமைத்து தரவும் கோரிக்கை வைத்தனர்.

பெருமாள் மலை பகுதியில் இருந்து கொடை க்கானல் வரை நெடு ஞ்சாலைகளில் ஆக்கிர மிப்புகள் அதிகரித்துள்ள தாகவும் இதனை அகற்ற நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை வைத்தனர்.விவசாயிகளின் குறைகள் விரைவில் தீர்க்கப்படும் என விவசாயிகள் கூட்டத்தில் கலந்து கொண்ட அதிகாரிகள் தெரிவித்தனர்

Tags:    

Similar News