காஞ்சிபுரம், செங்கல்பட்டில் நாளை மக்கள் குறைதீர் கூட்டம்
- கோரிக்கைகளை மனுக்கள் மூலம் அளிக்கலாம்.
- தீர்வுகாண உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
காஞ்சிபுரம்:
அமைச்சர் தா.மோ.அன்பரசன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பாராளுமன்றத் தேர்தல், சட்மன்ற கூட்டத் தொடர், விக்கிரவாண்டி இடைத் தேர்தல் உள்ளிட்ட காரணங்களால் மாதந்தோறும் எனது தலைமையிலும், மாவட்ட கலெக்டர் மற்றும் அனைத்து துறை சார்ந்த உயர் அலுவலர்கள் முன்னிலையிலும் நடைபெற்று வந்த 'குறைகேட்பு கூட்டம்' கடந்த சில மாதங்களாக நடை பெறாமல் உள்ளது.
இந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இந்த குறை கேட்பு கூட்டம் நாளை செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக, மக்கள் நல்லுறவு மையத்திலும், அதேபோல் செங்கல்பட்டு மாவட்டத்தில் அன்று மாலை 3 மணியளவில் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலக மக்கள் நல்லுறவு மையத்திலும் நடைபெற உள்ளது.
இந்த கூட்டத்தில் பொதுமக்கள் மற்றும் உள்ளாட்சி மன்றப் பிரதிநிதிகள் தங்களது கோரிக்கைகளை மனுக்கள் மூலம் அளிக்கலாம். மேற்படி மனுக்கள் மீது கள விசாரணை மேற்கொள்ளப்பட்டு, தீர்வுகாண உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.