மாற்றுத்திறனாளிகளுக்கான குறை தீர்க்கும் கூட்டம்
- மாற்றுத்திறனாளிகள் 2 பேருக்கு ஊன்றுகோல் வழங்கப்பட்டன.
- 12 பேர் இருசக்கர, 3 சக்கர வண்டிகள் கேட்டும் என மொத்தம் 48 பேர் மனுக்கள் கொடுத்துள்ளனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி தாசில்தார் அலுவலகத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. இதற்கு கிருஷ்ணகிரி உதவி கலெக்டர் பாபு தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் வேடியப்பன் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறை தீர் கூட்டத்தை தொடங்கி வைத்தார்.
இதில் கிருஷ்ணகிரி மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த மாற்று திறனாளிகள் கோரிக்கை மனுக்களை கொடுதுதனர். தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் 2 பேருக்கு ஊன்றுகோல் வழங்கப்பட்டன.
இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், இந்த குறை தீர்க்கும் கூட்டத்தில் 30 பேர் உதவி தொகை கேட்டும், 6 பேர் இலவச வீட்டு மனை கேட்டும், 12 பேர் இருசக்கர, 3 சக்கர வண்டிகள் கேட்டும் என மொத்தம் 48 பேர் மனுக்கள் கொடுத்துள்ளனர். அந்த மனுக்கள் மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.
இந்த கூட்டத்தில் தாசில்தார்கள் சம்பத், விஜயகுமார் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.