உள்ளூர் செய்திகள்

முருகன்குறிச்சியில் உள்ள ஒரு மையத்தில் தேர்வு அறைகளில் மாநகராட்சி சுகாதார அலுவலர் இளங்கோ தலைமையில் தூய்மை பணியாளர்கள் கிருமிநாசினி மூலம் சுத்தப்படுத்திய காட்சி.

நெல்லை மாவட்டத்தில் நாளை மறுநாள் 230 மையங்களில் குரூப்-4 தேர்வு- 61,086 பேர் எழுதுகிறார்கள்

Published On 2022-07-22 09:41 GMT   |   Update On 2022-07-22 09:41 GMT
  • தேர்வு நடக்கும் கல்வி நிலையத்திற்கு போதிய போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யவும், 108 ஆம்புலன்ஸ் தயாராக வைத்திடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
  • தேர்வர்கள் கண்டிப்பாக மாஸ்க் அணிந்து வருவதுடன் கொரோனா தொடர்பான வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நெல்லை:

நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

"தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வா ணையம் நடத்தும் குரூப்-4 தேர்வு நாளை மறுநாள் (24-ந் தேதி)நடக்கிறது.

நெல்லை மாவட் டத்தில் நெல்லை, பாளையங்கோட்டை, மானூர், அம்பை, சேரன் மகாதேவி, நாங்குநேரி, திசையன்விளை, ராதாபுரம் ஆகிய 8தாலுகாக்களில் 191இடங்களில் அமைக்கப்பட்டுள்ள 230 மையங்களில் இத்தேர்வு நடக்கிறது.

தேர்வு சம்பந்தமான அனைத்து நடவடிக்கை–களையும் கண்காணித்து தேர்வை சுமூகமாக நடத்த ஒவ்வொரு தாலுகாவிற்கும் தலா ஒரு துணைகலெக்டர் வீதம், 8 துணை கலெக்டர்களும், தேர்வெழுதுவோரை கண்காணிக்க 230 ஆய்வு அலுவலர்களும், 11 பறக்கும்படை அலுவலர்களும் தேர்வு பணிகள் மேற்கொள்ள தாசில்தார், துணை தாசில்தார் நிலையில் 59 சுற்றுக்குழு அலுவலர்களும், தேர்வு நடவடிக்கைகளை பதிவு செய்திடும் வகையில் 238 வீடியோ கிராபர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தேர்வு நாளன்று தடைபடாத மின்சாரம் வழங்கவும், தேர்வு மையத்திற்கு கூடுதலாக பஸ்கள் இயக்கமாறும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தேர்வெழுத அதிக மாணவர்கள் வர இருப்பதால் தேர்வு மையங்களில் கொரோனா தொற்றின் காரணமாக சுத்தப்படுத்தும் பணிகளை மேற்கொள்ள மாநகராட்சி ஆணையாளர், நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர், உதவி இயக்குநர் (ஊராட்சி), (பேரூராட்சி) ஆகியோருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் கண்டிப்பாக மாஸ்க் அணிந்து வருவதுடன் கொரோனா தொடர்பான வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

தேர்வர்கள் தேர்வு மையங்களை கண்டறிந்து முன்னதாக வருமாறு கேட்டுக்கொள்ளப்படு–கின்றனர்.

தேர்வறை–யினுள் செல்போன் எடுத்துச் செல்லக்கூடாது. தேர்வெழுதுபர்கள் தவிர வேறு யாரும் தேர்வு மைய வளாகத்திற்குள் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News