உள்ளூர் செய்திகள்

தாளியூர் மாகாளியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா

Published On 2023-05-03 09:32 GMT   |   Update On 2023-05-03 09:32 GMT
  • கடந்த 18-ந் தேதி வாஸ்து பூஜையுடன் திருவிழா தொடங்கியது.
  • தொடர்ந்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

கவுண்டம்பாளையம்,

கோவை துடியலூர் அடுத்துள்ள பன்னிமடை ஊராட்சி தாளியூரில் உள்ள மாகாளியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா நடைபெற்றது. கடந்த 18-ந் தேதி வாஸ்து பூஜையுடன் தொடங்கிய விழாவில் கணபதி ஹோமம், பூச்சாட்டுதல், கொடி ஏற்றுதல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

தொடர்ந்து பொன்னூத்து, அனுவாவி, மருதமலை ஆகிய கோவில்களில் இருந்து புனித நீர் கொண்டு வருதல், சக்தி கரகம் ஊர்வலம், அம்மனுக்கு திருக்கல்யாணம், வாஸ்து, புஷ்ப மற்றும் மலர் அலங்கார பூஜைகள், விளக்கு பூஜை நடை பெற்றது.

தொடர்ந்து நேற்று குண்டம் கண் திறப்பு, கரும்பு வெட்டுதல், வாண வேடிக்கை உள்ளிட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இதனையடுத்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான குண்டம் திருவிழா இன்று காலை தொடங்கியது.

இதில் அம்மனுக்கு வெண்ணை சாற்றிஉருகி வழிந்ததும், பூச்செண்டை குண்டத்தில் உருட்டி பூசாரி, சக்தி கரகம், துணை கரகங்கள், அணிக்கூடை, வேல் ஏந்திய பக்தர்கள், ஊர் பெரியவர்கள் என ஒவ்வொருவராக பூக்குண்டத்தில் இறங்கினர்.

தொடர்ந்து பக்தர்கள் மற்றும் குழந்தைகள் பூக் குண்டத்தில் இறங்கினர். அப்போது பக்தர்கள் ஓம் சக்தி, பராசக்தி என கோஷங்கள் எழுப்பினர். தொடர்ந்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News