செங்கோட்டை, புளியரை தட்சிணாமூர்த்தி கோவிலில் குருபெயர்ச்சி விழா
- தட்சிணா மூர்த்தி பகவானுக்கு 21 வகை நறுமண பொருள்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
- நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
செங்கோட்டை:
செங்கோட்டை அறம் வளா்த்தநாயகி உடனுறை குலசேகரநாத சுவாமி கோவிலில் தனி சன்னதியாக வீற்றியிருக்கும் தட்சிணா மூர்த்தி பகவான் சன்னதியில் குருபெயர்ச்சி விழா நடந்தது. இதனை முன்னிட்டு சிறப்பு ஹோமங்கள், தட்சிணா மூர்த்தி பகவானுக்கு 21 வகை நறுமண பொருள் களை கொண்டு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை, இரவு 10மணிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் செங்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினா் செய்தி ருந்தனா்.
மேலும் செங்கோட்டை அடுத்துள்ள புளியறை சிவகாமி அம்பாள் உடனுறை சதாசிவமூர்த்தி ,தட்சிணா மூர்த்தி கோவிலில் இன்று குருபெயர்ச்சி விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.
இந்த சிறப்பு குருபெயர்ச்சி வழிபாடு மற்றும் தமிழ் புத்தாண்டை யொட்டி தென்காசி மாவட்டம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், கேரளாவிலிருந்தும் பக்தா்கள் அதிகளவில் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனா்.